சர்வதேச அரங்கில் எம்மவர் திரைப்படம் ‘The Protector’

84

லெனின் எம்.சிவம் (Lenin M. Sivam) இயக்கி, இலங்கையின் ஒளிப்பதிவாளர் Kalinga Dhesapriya வின் ஒளிப்பதிவில் உருவான The Protector திரைப்படத்தின் முதல் காட்சி Fantasia சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.

இலங்கை – யாழ்ப்பாணத்தில் பிறந்த லெனின் எம்.சிவம் 1991 இல் கனடாவின் டொராண்டோவிற்கு குடிபெயர்ந்தவர்.

இவரது முதல் குறும்படமான ‘A few good people’ – 2006 இல் Indepandent art sociaty யின் ஆண்டின் சிறந்த குறும்படத்திற்கான விருதை வென்றது. இவரது ‘1999’, ‘Gun and Ring’, ‘ROOBHA’ என்பன சர்வதேச கவனத்தை ஈர்த்த திரைப்படங்களாகும்.

Roobha வில் எழுத்தாளர் Shoba Sakthi பிரதான பாத்திரமொன்றில் நடித்துள்ளார்.

லெனின் எம். சிவம் தற்போது இயக்கியிருக்கும் படம் The Protector. YN Films வழங்கும் இந்த ஆங்கிலத் திரைப்படத்தில் Chelsea Clark, Munro Chambers மற்றும் Jasmin Geljo ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.