பலரையும் ‘அட’ போட வைத்த தனுஷனின் ‘RETRATO’ குறும்படம்

170

Calista Entertainment தயாரிப்பில் தனுஷனின் இயக்கத்தில் உருவாகி அண்மையில் வெளிவந்த குறும்படம் ‘RETRATO’.

இதில் சச்சின் மற்றும் றுக்ஷான் ஆகியோர் பிரதான பாத்திரமேற்று நடித்துள்ளதுடன், ஷான் ஒளிப்பதிவையும், அஜித் படத்தொகுப்பையும் மேற்கொண்டுள்ளனர். இசை PIERRE VAUCHER.

ஒவ்வொரு கலைஞர்களுக்குள்ளும் ஒரு பைத்தியக்காரத்தனம் ஒளிந்திருக்கும். கலையில் அவர்களின் ஈடுபாட்டைப் பொறுத்து அந்த பைத்தியக்காரத்தனம் மாறுபடும். அப்படி ஓவியக்கலையில் இருவேறு நிலைப்பாடுகளைக் கொண்ட ஓவியர்களை மையப்படுத்தி இக்குறும்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

படத்தில் ஒளிப்பதிவு, இசை மற்றும் ஒலிச்சேர்க்கை பிரமாதமாக இருக்கின்றது. Portrait ஓவியங்களால் நிறைந்த அறையும் அதனை வடிவமைத்த கலை இயக்குனர்களும் (மது, மேனன்) பாராட்டுக்குரியவர்கள்.

ஓவியக்கலைஞர்களுக்கு இருக்கக்கூடிய அதே வெறித்தனத்தை கண்முன்னே கொண்டு வந்தது மட்டுமில்லாமல் இந்தக் கதையை குறும்படமாக எடுக்க வேண்டும் என நினைத்த இயக்குனர் தனுஷனின் சினிமா மீதான பைத்தியக்காரத்தனத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு ‘RETRATO’.

இந்தக் குறும்படம் அண்மையில் கொழும்பு ஈரோஸ் திரையரங்கில் விசேட காட்சியாக காண்பிக்கப்பட்டிருந்ததுடன், வந்திருந்த அநேக பார்வையாளர்களின் பாராட்டுக்களையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.