குவியம் டிஜிட்டல் விருதுகள் 2022 – அறிவிப்பு இல. 04

119

110 போட்டியாளர்கள், 255 படைப்புக்கள்

பூவரசி மீடியா பிரதான அனுசரணையில் ARC Mobile இணை அனுசரணையில் குவியம் இணையம் முதன் முறையாக இலங்கைத் தமிழ் சினிமா கலைஞர்களை கௌரவித்து உற்சாகப்படுத்தும் வகையில் “குவியம் டிஜிட்டல் விருதுகள் 2022” இற்கான அறிவிப்பினை கடந்த மாதம் வெளியிட்டிருந்தது.

அதன்படி ஏராளமான எம் கலைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. விண்ணப்ப இறுதித்திகதியான கடந்த ஜூன் 30 ஆம் திகதி வரை 110 போட்டியாளர்களிடம் இருந்து 255 படைப்புக்கள் எம்மை வந்தடைந்துள்ளன.

குறும்படங்கள், காணொளிப்பாடல்கள் மற்றும் வெப் தொடர்களுக்கு தனித்தனியாக வழங்கப்படவுள்ள இந்த விருதுகள் ஏறக்குறைய 12 பிரிவுகளின் கீழ் வழங்கப்படவுள்ளன. தவிர, 10 இற்கும் மேற்பட்ட சிறப்பு விருதுகளும் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விருது விழாவினை இம்மாதம் இறுதியில் யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு திட்டமிட்ட போதும் சமகால நாட்டு (அரசியல் மற்றும் பொருளாதாரம்) நெருக்கடி நிலைமையில் அதனை திட்டமிட்ட முறையில் நடத்துவது சவாலான விடயமாக மாறியுள்ளது.

நாடளாவிய ரீதியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கலைஞர்கள் நிகழ்வில் பங்கேற்க இருப்பதனால், குறைந்தபட்சம் போக்குவரத்து சுமூகமாக இடம்பெறும் காலத்திலாவது அதனை நடத்தலாம் என எண்ணியுள்ளோம். விரைவில் விருது விழா நிகழ்வுக்கான அழைப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுவோம் என நம்புகின்றோம்.

உங்களால் உங்களுக்கான கௌரவம் – குவியம் டிஜிட்டல் விருதுகள்.