சுகிர்தன் இயக்கத்தில் “கலைத்தமிழ்” குறும்படம் – நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள டீசர்

402

சுகிர்தன் கிறிஸ்துராஜா இயக்கத்தில் அஜய் ஜஸ்ரின், கீர்த்தி நடிப்பில் உருவான “கலைத்தமிழ்” குறும்படத்தின் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக்குறும்படத்திற்கான பாடல் இசையை திருச்சி அருள்தேவும், பின்னணி இசையை பத்மயன் சிவாவும் அமைத்துள்ளனர். ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளை கதிர் கவனித்துள்ளார்.

தென்னிந்தியாவில் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கும் சுகிர்தன் 91-19, பப்பாளி, நந்திக்குவேனி உள்ளிட்ட பல பாடல்களில் பணியாற்றியிருக்கின்றார். இலங்கையில் இருந்தான சினிமா முயற்சிகளில் வேறு வேறு இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் அவர், “கலைத்தமிழ்” பாடல் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

என்னை நம்பி இருக்கும் அத்தனை பேருக்கான சிறு நம்பிக்கை தான்
இந்த படைப்பு. யாரையும் நம்பி, எதிர்பார்த்து நிற்காததால் என்னமோ நான் மெதுவாக, தெளிவாக, தைரியமாக நகர்கின்றேன். கதை திரைக்கதை வசனம் இயக்கம். இத்தனையும் பாரிய பொறுப்பு என்பதை அனைத்து சினிமாக்காரர்களும் அறிந்ததே. அதை அவர் அவர்கள் கையில் எடுக்கும் போதுதான் அதன் கனம் புரிகிறது.

” கற்பனைகள் கனத்திருக்கும் ஒரு உதவி இயக்குனன் எப்படியெல்லாம் காதலிப்பான் அவனின் எதிர்பார்ப்புக்கள் எப்படி எல்லாம் இருக்கும். அவன் கனவுக்கான நிலையும் கடனுக்கான நிலையில் வாழ்வுக்கான நிலையும் தான் இந்த படம் ” அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும், அதிலும் சிறப்பாக சினிமாவுக்காக வாழும் அனைத்து உயிர்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும். ஏனென்றால் எனக்கு பிடித்திருக்கிறது!
” கலைக்கும் தமிழுக்கும் என்றும் அழிவு கிடையாது அது போலவே நானும்” 💙 உங்கள் ஆதரவுக்காக எதிர்பார்த்து நிற்கின்றேன்.🙏