‘வானம் இங்கே நீலம் அங்கே’ பாடலின் டீசர் வெளியீடு

512

அஜந்த் மியூஸிக் வெளியீடாக மதுஸ்ரீ ஆதித்தனின் “வானகம் இங்கே நீலம் அங்கே” பாடல் எதிர்வரும் 31 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக பாடல் குழு அறிவித்துள்ளது.

ஈழத்தின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான சாயிதர்சன் இசையமைத்திருக்கும் இந்தப்பாடல் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் உருவாகியிருக்கின்றது.

பாடலின் தமிழ் வரிகளை வருண் துஸ்யந்தனும் சிங்கள வரிகளை சுசந்த ரேணுக குமாரசிங்கவும் எழுதியுள்ளார்கள். மதுஸ்ரீ மற்றும் நிதர்சன் ஆகியோர் பாடியுள்ளனர்.

காணொளிப்பாடலாக உருவாகியுள்ள இந்தப்பாடலில் சுதர்சன் மற்றும் டில்கி திசாநாயக்க ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஈழத்தின் முன்னணி ஒளிப்பதிவாளர் ரெஜி செல்வராஜா பாடலினை ஒளிப்பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல் இயக்கியும் உள்ளார். “வானம் இங்கே நீலம் அங்கே“ பாடலில் படத்தொகுப்பாளரும் அவர் தான்.

இந்நிலையில், பாடலின் டீசர் நேற்று (26) வெளியிடப்பட்டுள்ளது. கூடவே, பாடல் எதிர்வரும் ஓகஸ்ட் 31 ஆம் திகதி வெளியாகும் என்ற அறிவிப்பினையும் விடுத்திருக்கின்றார்கள்.

டீசரை பார்க்கும் போதே புரிகின்றது கண்களுக்கும், காதுகளுக்கும் விருந்து படைக்க ஒரு பாடல் தயார் என்பது.. வாழ்த்துக்கள் பாடல் குழுவுக்கு.