இசையிலும் இயக்கத்திலும் போட்டி போட்டிருக்கும் சாயிதர்சனும் ரெஜியும் – கலக்கலாக வந்திருக்கும் “வானம் இங்கே நீலம் அங்கே” பாடல்

994

இலங்கைத் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே “வானம் இங்கே நீலம் அங்கே” பாடல் குறித்து தான் ஒரே பேச்சு. அதுவும் டீசர் வெளியான நாளில் இருந்து பாடல் குறித்த எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்திருந்தது.

அந்த எதிர்பார்ப்பை பல மடங்கு பூர்த்தி செய்யும் வகையில் இன்று வெளியான பாடல் அமைந்திருக்கின்றது என்று சொன்னால் அது மிகையாகாது.

சாயிதர்சனின் கலக்கல் இசைக்கு உயிர் கொடுத்திருக்கின்றார் ரெஜி செல்வராசா. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் என அனைத்திலும் தனது முத்திரையை பதித்திருக்கின்றார் அவர்.

அஜந்த் மியூஸிக் வெளியீடாக வெளிவந்துள்ள இந்தப்பாடலை யாழ். பல்கலைக்கழக நுண்கலைப்பீட விரிவுரையாளர் மதுஸ்ரீ ஆதித்தன் மற்றும் ஆதித்தன் தயாரித்துள்ளனர். மதுஸ்ரீயுடன் இணைந்து நிதர்சன் பாடியுள்ளார்.

பாடலின் தமிழ் வரிகளை வருண் துஸ்யந்தன் எழுதியுள்ளார். சுதர்சன் மற்றும் டில்கி திசாநாயக்க ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வெறுமனே காதல் பாடலாக இல்லாமல் நல்லதொரு மெசேஜ்ஜூடன் அதனைத் தந்திருக்கின்றார் இயக்குனர் ரெஜி. சுதர்சன் மற்றும் டில்கியின் நடிப்பும் அளவாக அசலாக உள்ளது.

மனதை இசையாலும், கண்களை காட்சிகளாலும் குளிர்விக்கக்கூடிய இந்தப்பாடல் நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும். பாருங்கள்..

இந்தப்பாடலின் சிங்கள மொழி வெளியீடு இன்னும் சில நாட்களில் வெளிவரும் என பாடல்குழு அறிவித்திருக்கின்றது.