வட்ஸூ படைத்திருக்கும் ஃபுள் மீல் “வியல்” பாடல்

77

ATHI M CREATIONS சார்பில் உமா தயாரித்திருக்கும் பாடல் “வியல்”. இதனை வட்ஸூ இயக்கியுள்ளார்.

ஜொனாவின் இசையில் வெளிவந்துள்ள இந்தப்பாடலை மது பாலா மற்றும் சிந்தூரா ஆகியோர் பாடியுள்ளனர். பாடலுக்கான வரிகள் மதன் சி.

கீர்த்தனா மற்றும் கபில் ஷாம் ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்பாடலில் இயக்குனர், நடிகர் மதிசுதா கௌரவ வேடத்தில் நடித்துள்ளதுடன், பல குழந்தை நட்சத்திரங்களுடன் ஏராளமானவர்கள் பங்கேற்றிருக்கின்றார்கள்.

சோபனா சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்பாடலின் படத்தொகுப்பு பணிகளை பிரியந்தன் கவனித்துள்ளார்.

பாடலில் முக்கிய கவனம் பெறுவது கலை இயக்கம் மற்றும் ஆடை வடிவமைப்பு. அந்த வகையில் கலை இயக்கத்தை காந்தரூபனும், ஆடை வடிவமைப்பு பணிகளை எஸ்.ரி.வாகீசனும் கிரித்யா சாந்த சிறியும் கவனித்துள்ளனர்.

பாடலின் முதற்பார்வை பலரைக் கவர்ந்த நிலையில் இன்று பாடல் வெளியாகி பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகின்றது. முக்கியமாக இந்த பாடல் உருவாக்கத்தின் பின்னர் நிறைந்த உழைப்பு இருக்கின்றது என்பதை பாடல் பார்த்த பின் உணர முடிகின்றது.

வித்தியாசமான கதைக்களத்துடன் பாடலை அமைத்த புவனேஸ்வரன் பிரசாந்திற்கும் அதனை அழகுற இயக்கிய வட்ஸூவுக்கும் எமது பாராட்டுக்கள். ஒட்டுமொத்தமாக ஈழ சினிமாவில் இதுவரை வெளிவந்த பாடல்களில் வித்தியாசத்தை வழங்கியது மட்டுமல்லாமல் அதனை ரசிக்கவும் செய்திருக்கும் பாடல் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.