இரட்டை வேடத்தில் திஷான் – அசத்தும் கதிரின் “இறவான்“ பாடல்

510

கதிரின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளிவந்துள்ள பாடல் “இறவான்”. இந்தப்பாடலில் திஷான் ஆனந்த் மற்றும் மான் விழி ஆகியோர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜெயந்தன் விக்கியின் இசையில் உருவான இந்தப்பாடலை அவரே பாடியுள்ளார். பாடல் வரிகளை மஹிஸ் எழுதியுள்ளார்.

பாடலுக்கான ஒளிப்பதிவை இலங்கேயன் பிக்சர்ஸ் ரெஜி செல்வராசா மேற்கொண்டுள்ளதுடன் படத்தொகுப்பு மற்றும் வர்ணச்சேர்க்கை பணிகளை கதிர் கவனித்துள்ளார்.

பாடலின் நாயகன் இரட்டை வேடங்களில் நடித்திருப்பதனால், இதற்காக ஒளிப்பதிவாளர் மற்றும் படத்தொகுப்பாளர் நன்றாகவே வேலை செய்திருக்கின்றார்கள் என்பது பாடலைப் பார்க்கும் போதே தெரிகின்றது.

குறிப்பாக கணனி வரைகலை (CG) வேலைகள் நிஜம் எது? கிராபிக்ஸ் எது? என்று தெரியாத அளவிற்கு இருக்கின்றது.

திஷான் இருவேடங்களில் மிரட்டி நடிப்பில் வித்தியாசம் காட்டுகின்றார். மான் விழி அழகுப்பதுமையாக வந்து செல்கின்றார். மொத்தத்தில் நம்பிக்கை தரும் படைப்பாளிகளான ரெஜி, கதிர் உள்ளிட்டோர் இணைந்திருக்கும் இந்தப்பாடல் ஏமாற்றவில்லை. அவர்களது கடின உழைப்பு பாடலில் வெளிப்படுகின்றது.

குறிப்பாக இந்தப்பாடல் ஒரே நாளில் படம்பிடிக்கப்பட்டது என ஒளிப்பதிவாளர் ரெஜி செல்வராசா குவியம் இணையத்திற்கு தெரிவித்தார். வாழ்த்துக்கள் பாடல் குழுவினருக்கு..