பெட்ரோலால் பறிபோன இளைஞனின் காதல் – 1L Petrol பாடல்

287

பெட்ரோல் தட்டுப்பாட்டுப் பிரச்சனையால நம்ம நாட்டில 1000 பிரச்சினைகள் இருக்கும் போது ஒரு இளைஞனனின் காதல் பறிபோன சம்பவத்தை கலகலப்பாக பாடலாக்கியிருக்கின்றார்கள் 1L Petrol குழுவினர்.

மைக்கேல் காந்தகரனின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப்பாடலுக்கான இசையினை திசோன் விஜயமோகன் அமைத்துள்ளார். கோகுலன் பாடியுள்ளார்.

காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இந்தப்பாடலில் சிஜே டுஜா மற்றும் ஆன் நயோமி ஆகியோர் நடித்துள்ளனர். பாடலின் ஒளிப்பதிவு படத்தொகுப்பு மற்றும் இணை இயக்குனர் ஆர்ஜே நெலு. நடன இயக்குனர் சிஜே டுஜா.

இலங்கையின் சமகால நெருக்கடியை பிரதிபலிக்கும் வகையில் ஒரு பாடலை தயாரித்து இயக்கியிருக்கின்றார் காந்தகரன். வாழ்த்துக்கள் பாடல் குழுவினருக்கு.