யாழ். பல்கலை வேந்தரினால் வெளியிடப்பட்ட “சங்காரம்” திரைப்பட முதல் பார்வை

419

Bharanee cine camp இன் அடுத்த படைப்பாக திரு.பரணீதரன் சுந்தரமூர்த்தியின் தயாரிப்பில் உருவான “சங்காரம்” திரைப்படத்தின் முதல் பார்வையை யாழ்ப்பாண பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் பத்மநாதன் அண்மையில் வெளியிட்டு வைத்தார்.

மட்டக்களப்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் கடந்த 11-08-2022 மாலை 6:30 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப்புரவலர் திரு. ரஞ்சித மூர்த்தி மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் இது வெளியிடப்பட்டது.

இந்தப் படத்திற்கான ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு, VFX பணிகளை கணேசலிங்கம் புஷ்பகாந்த் மேற்கொண்டுள்ளார். இசை, ஒலிக்கலவை மற்றும் SFX பணிகளை ஷங்கர்ஜன் ஜெயவரதராஜன் கவனித்துள்ளார்.

போஸ்ரர் வடிவமைப்பு Tn சதீஸ், இணை இயக்குனர் JaNi ThAn, சிகை அலங்காரம் TK saloon, கலை இயக்குனர் Abd Sebasteen Akila.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கின்றார் நம் நாட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கோடீஸ்வரன்.

ஜனா RJ , திவ்யா பத்மினி, கிஷோ கண்ணன், ரா.பெனாபில்லா, ABD செபஸ்டின், புஸ்பகாந்த், கிருஷிகா, ருத்ரா, Thil Hasha, தங்கவேலு அஜித், Sk சசி, யுவன் தங்கராசா, டிவேதனா, கதிரவன் T இன்பராசா, பூபாலசிங்கம், வரதஹரன் சிவபாதசுந்தரம், கலாவிபூஷணம் ரகுதாஸ் சண்முகநாதன், லோஜினி மகேந்திரா, புகழாரனி, லாவண்யா, முகேஷ் கண்ணா, பேருஷன், அனுமிக்கா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.