அட்டகாசமாய் ஒரு மொபைல் குறும்படம் – கொஞ்சம் தண்ணி தாங்க (Mobile Short film)

454

Dreamsphere Creations தயாரிப்பில் டிருஷாந்த் திவாகரனின் எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் குறும்படம் “கொஞ்சம் தண்ணி தாங்க”.

சஸ்பென்ஸ் – த்ரில்லர் வகையில் உருவாகியிருக்கும் இந்தக் குறும்படத்திற்கான ஒளிப்பதிவை வசந்த் மேற்கொண்டுள்ளதுடன், படத்தொகுப்பு பணிகளை குனேகாந்த் ஜெயகணேஷ் கவனித்துள்ளார்.

சஞ்ஜீவன் லிங்கேஷ், டிருஷாந்த் திவாகரன் மற்றும் பிரசாந்த் நவரெத்னம் ஆகியோர் நடித்துள்ளனர்.

இது மொபைலில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட குறும்படம் என்பதால் ஒளிப்பதிவில் சில குறைகள் தென்பட்டாலும், எடுத்துக் கொண்ட கதையை நேர்த்தியாக பார்ப்பவர்களுக்கு புரியும் வகையில் சொல்லியிருக்கிறார்கள்.

குறிப்பாக நடிப்பு பாராட்டப்பட வேண்டியது. பைத்தியம் போல நடிப்பவர் கதை சொல்லும் பாங்கு.. வசனங்களுக்கு ஏற்ப தனது முகபாவங்களை மாற்றுவது.. ஒரே டேக்கில் வசனங்களை பேசுவது என அசத்தியிருக்கின்றார்.

நிச்சயம் இக்குறும்படம் அவர்களது பரீட்சார்த்த முயற்சியாக இருக்கும். இனிவரும் காலங்களில் இன்னும் மெருகுடன் படைப்புக்களை தயாரிக்க வாழ்த்துக்கள்.

Written and directed by Dirusaanth Thivaharan
Produced by Dreamsphere Creations
Cinematography by Vasanth SV
Cast by Sanjeevan Lingesh Lsj, Dirusaanth Thivaharan, Prasanth Navarethnam
Edit , Sfx & Poster Design by Kunekanth Jayakanesh (Editomatic)
Voic cast : Vish Siva