பூஜையுடன் ஆரம்பித்தது ஈழவாணியின் “மூக்குத்திப்பூ” திரைப்படம்!

1293

பூவரசி மீடியா தயாரிப்பில் ஈழவாணியின் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய திரைப்படம் “மூக்குத்திப்பூ”. இதன் படப்பிடிப்புக்கள் பூஜையுடன் அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளன.

சபேசன், ரூபன் சிவா, தீப்திகா, விதுர்ஷன், திருமலை பிரணா, கிருஷாணிகா, தனுஜா, ருவி, சிந்து, ஆர்.கே.ஸ்டார்க், ருசிந்தன், இளங்கோ, பவி, வாணி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகிவரும் இந்த திரைப்படத்திற்கான ஒளிப்பதிவை “இலங்கேயன் பிக்சர்ஸ்” ரெஜி செல்வராசா மேற்கொண்டுள்ளார்.

இதன் முதற்கட்டப்படப்பிடிப்புக்கள் இலங்கையில் நிறைவடைந்துள்ள நிலையில் இயக்குனர் ஈழவாணி தனது பேஸ்புக் பக்கத்தில்,

மூக்குத்திப்பூ- காதலும் கலக்கலும்
விரைவில் ஈழத்திரை ரசிகர்களுக்கு விருந்தாகும்.
படப்பிடிப்பு இனிதே நிறைவுற்றது.
பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்களும் அன்பும்
❤️ – எனக்குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் சில காட்சிகள் லண்டனில் படமாக்கப்படவிருப்பதாகவும், படத்தை அடுத்த வருட முற்பகுதியில் திரையிட எதிர்பார்த்துள்ளதாகவும் படக்குழு குறிப்பிட்டுள்ளது.