தினு மகேந்திரனின் உயிரோட்டமான “தாயுமானவர்” குறும்படம்

437

தினு மகேந்திரனின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தில் நேற்று (01) வெளியாகியுள்ள குறும்படம் “தாயுமானவர்”. குறும்படத்திற்கே உரிய லட்சணங்களுடன் 4 நிமிடத்தில் மிக அழகாகவும் உயிரோட்டமாகவும் இந்தக் குறும்படம் எடுக்கப்பட்டிருக்கின்றது.

தாயுமானவர் குறும்படத்திற்கான ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளை எஸ்.என்.விஷ்ணுஜன் கவனத்திருப்பதுடன், ஏ.என்.அன்ட்ரூ இசையமைத்திருக்கின்றார்.

ஜெனா ஆர்ஜே, கிஷோ கண்ணன், சந்தோஷ், ஜனார்தன், சதுர்ஷன், உகைல் அன்டனி, ரேணுகா, மேனுகா, தர்ஷினி மற்றும் அரியபுஷ்பம் ஆகியோர் நடித்திருக்கின்றார்கள்.

பிரதான நடிகர்களின் நடிப்பு அளவாக அபாரமாக இருக்கின்றது. கொஞ்சம் பிசகினாலும் மிகை நடிப்பாகவோ, சொதப்பலாகவோ ஆகிவிடக்கூடிய கதை இது. அதை உணர்ந்து நடிகர்களின் வேலை வாங்கியிருக்கின்றார் இயக்குனர். படத்தின் உயிரோட்டத்திற்கு இசை பக்கபலமாக இருக்கின்றது. வழக்கம் போல விஷ்ணுஜனின் ஒளிப்பதிவும் அட்டகாசம்.

தாயும் தந்தையுமாக இருக்கக் கூடிய அந்த தாயுமானவர் பற்றி மிகவும் உருக்கமான ஒரு படைப்பைத் தந்த இளம் இயக்குனர் தினு மகேந்திரன் பாராட்டுக்குரியவர்.