“சினிமா செய்வது ஒன்றே எமது நாளைய ஆயுதம்“ – இயக்குனர் ஜெனோசன்

405

“உன் நினைவுகளில்“, “அவளதிகாரம்“, “இறகெனும் நினைவுகள்“ உள்ளிட்ட பல பாடல்களையும், குறும்படங்கள் சிலவற்றையும் இயக்கியவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெனோசன் ராஜேஸ்வர்.

இவர் தென்னிந்திய திரைப்படங்கள் சிலவற்றிலும் உதவி இயக்குனராக பணிபுரிந்திருக்கின்றார். தவிர, பல்வேறு ஈழத்து திரைப்படங்கள், குறும்படங்கள், பாடல்களில் மக்கள் தொடர்பாளராகவும் பணியாற்றியிருக்கின்றார்.

அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கீழ்வருமாறு பதிவிட்டிருக்கின்றார்.

தமிழ் திரைத்துறையற்ற ஈழ / இலங்கை சினிமா…
கற்றலற்ற, நகர்வுகளற்ற சினிமாவை வளர்க்க நினைக்கும் மாவட்டவாரியான கலைஞர்கள்.
உருவாகும் சில குறும்படங்களும், பாடல்களும், முழுநீளத்திரைப்படங்களும் கூட ஆதரவற்று அடுத்த படைப்பை உருவாக்கி திரையிட முடியாத நிலை.
கதாநாயகிகள் என்று தங்கள் விம்பங்களை கொண்டு பலரோடு வாழும் இளம் சமுதாய தமிழ் பெண்கள்.
பார்ட்டி மற்றும் டீஜே நைட் கலாச்சாரங்களை கொண்டாடி மகிழும் இலங்கை தமிழ் கலைஞர்கள், ஊடகங்கள், டிஜிட்டல் மீடியாக்கள்.
தரமான சினிமாவை சிங்கள சினிமாத்துறை கூட பின்பற்றும் நுனியில் எம் நண்பர்கள் இல்லை என்பது கவலை.
ஏதோ சில படைப்புக்களை கொண்டு தலைக்கனத்தில் பலர், அவரவர் புரமோசனை வைத்து இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்து போதை பொருட்களை நகர்த்தும் பலர்.
இலங்கையும் தமிழ் சினிமாவும் இதுதான். வெட்கத்தோடு தலைகுனிந்து கூறுகிறேன்.
படைப்புக்களில் கவனம் கொள்ளும் சில கலைஞர்களே சினிமா பெருங்கடல்…. கற்றுக்கொள்ளுங்கள். உருவாக்குங்கள்…. உலகறியச்செய்யுங்கள்.
நாளைய ஈழ தமிழ் சினிமா, கனவு என்று ….. கூறி தரமற்ற சண்டைகளை சுமந்து உங்கள் குடும்ப பண்புகளை இழிவடைய செய்யாதீர்கள்.
சினிமா செய்வது ஒன்றே எமது நாளைய #ஆயுதம்.
நல்ல குறும்படங்கள் திரைப்பட விழாக்களை தொடலாம், இலங்கை திரையரங்குகளை எம் தரமான தமிழ் சினிமாக்கள் ஆட்கொள்ளலாம். தரமான உருவாக்கமும், தொழிநுட்பமும் தெரிந்திருந்தால்.
இந்திய, அமெரிக்க, ஈரானிய, திரைப்பட உலகையும் விம்பங்களையும் தாண்டி எம் கதைகளையும் வாழ்வையும் உருவாக்கவும், திரையிடவும் அவற்றை ஒப்பேற்றவும் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் தமிழ் மக்கள் பரந்து வாழ்கின்றனர்.
தயாரிப்பாளர்களை தேட முதலில், நாம் தரமானவர்களாகவும் சினிமாவை கற்றுக்கொண்ட விதத்தை தெளிவாக கூறவும், படைப்பை விநாயோகி்க்க விளம்பர வியூகம் தெரிந்தும் அணுக வேண்டும்.
ஐரோப்பிய பிராந்தியம் எமது தயாரிப்பாளர்களையும், சினிமாவையும், பார்வையாளர்களையும் பெருவாரியாக கொண்டிருக்கின்றது.
இன்னும் எத்தனை ஆண்டுகள்….. நகரும் எமக்கான கனவு….
எமது தரமான சினிமா….