சில்லென்ற தென்றலூடு சங்கீர்த்தனின் காதல் பயணம் “ஹேய் ஷாரா”

502

I CAN Studios தயாரிப்பாக Jaffna Zero Budget Films அனுசரணையுடன் வெளிவந்திருக்கும் அழகான பாடல் “ஹேய் ஷாரா”.

இந்தப்பாடலை இசையமைத்து பாடியுள்ளதுடன், காணொளிப்பாடலை எழுதி இயக்கியிருக்கின்றார் சங்கீர்த்தன். பாடலுக்கான கவி வரிகள் சுபாஸ்கரன். இந்தப்பாடலின் உதவி இயக்குனரும் அவரே!

மியூலின் மற்றும் சங்கீர்த்தனன் ஆகியோர் நடித்திருக்கும் பாடலினை அழகாக ஒளிப்பதிவு செய்து படத்தொகுப்பு செய்திருக்கின்றார் ஷைரஜன்.

காதலின் பிரிவு பற்றிய நண்பர்களின் பேச்சினூடே ஆரம்பிக்கும் பாடல் அப்படியே ரம்பொடை சுரங்கத்தினுள் நுழைந்து ஹப்புத்தளை, நுவரெலியா என மலையகத்தின் எழில்கொஞ்சும் இடங்களில் தவழ்ந்து செல்கிறது.

இசையமைப்பாளரும், இயக்குனரும் ஒருவரே என்பதால் பாடலின் feel கெடாமல் அழகாக காட்சிப்படுத்தியிருக்கின்றார். கூடவே, நடிப்பதும் அவரே என்பதால் உணர்வுகளையும் தத்ரூபமாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்.

ஷைரஜனின் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு எப்போதும் போல அசத்தல் தான்.

Produced by I CAN Studios
Association Partner – Jaffna Zero Budget Films
Composed, Arranged, Sung, Written & Directed by Shangeerththan
Lyrics & Assistant Director – Sabaskaran
Cinematography, Editing, D.I – Shyrajan
Artist – Miyuelin & Shangeerththan