மிரட்டலாக வெளிவந்திருக்கின்றது இந்திரஜித்தின் “யாழினி” டீசர்

1155

ஆதி சக்தி ஃபிலிம்ஸ் மற்றும் வி.ஜே.புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இந்திரஜித்தின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “யாழினி”.

இதில், ஜனா ஆர்ஜே, ரமணி ரவிச்சந்திரன், ஏகே சந்துரு, சுலக்ஷன், வாலு, தனுஷ்கா ரமேஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப்படத்திற்கான ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை கோவர்த்தனன் மேற்கொண்டுள்ளார். படத்தின் கதையையும் அவர் தான் எழுதியுள்ளார். யாழினி படத்தினை இயக்கியதோடு மட்டுமல்லாமல் அதற்கு இசையையும் அமைந்துள்ளார் இந்திரஜித்.

இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகியுள்ளது. டீசரைப்போலவே படமும் மிரட்டலாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.