தீபாவளிக்கு சப்ரைஸ் கொடுக்கும் “போடியார்” படக்குழு – ட்ரெயி லர் இன்று வெளியீடு

643

விஷூவல் ஆர்ட் மூவீஸ் தயாரிப்பாக கோடீஸ்வரன் இயக்கத்தில் மட்டக்களப்பு மண்வாசனையுடன் உருவாகிவரும் “போடியார்” திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி (Trailer) இன்று (23) மாலை 05 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ட்ரெயிலரை இந்த இணைப்பை கிளிக் செய்வதன் ஊடாக கண்டு மகிழலாம்.

நடுத்தர நீளத்திரைப்படமாக (ஒரு மணி நேரம்) உருவாகிவரும் போடியார் திரைப்படத்தை Dr.அருளானந்தம், சதா. சண்முகநாதன், ப.முரளிதரன் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

இதன் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளை ஜி.புஸ்பகாந்த் மேற்கொண்டுள்ளதுடன், இசைப் பணிகளை AJ சங்கர்ஜன் கவனித்துள்ளார்.

விஷூவல் ஆர்ட் மூவீஸ் ப.முரளிதரன் இதன் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளதுடன், இணை இயக்கம் ஜனிதன், போஸ்ட்டர் வடிவமைப்பு TN சதீஸ், சிகை அலங்காரம் TK கண்ணன், கலை இயக்கம் செபஸ்டின், தயாரிப்பு மேற்பார்வை அஜித்.

ஜனா RJ, RJ நெலு, கலைமாமணி காண்டீபன், சுஜானி பீட்டர் (சுஜி), சாஷா கிரேஸ், ப.முரளிதரன், பாரதி கென்னடி, சந்திராவதி, நவரெட்ணராஜா, செபஸ்டின், அஜித், றுத்றா, தாருகேஷினி, RJ கனிஸ்றன், ஆஹிஷன், தங்கயுவன், RJ லேணுஜன், பொத்துவில் வில்லூர்பாரதி, ரா. பெனாபில்லா, நிரன், பேருஷன் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.