மண்வாசனையுடன் தயாராகும் ஜூட் சுகியின் “பாலை நிலம்” திரைப்படம் – ட்ரெயிலர் வெளியீடு!

346

2J மூவிஸ் தயாரிப்பில் ஜூட் சுகியின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மற்றும் ஒளிப்பதில் உருவாகிவரும் திரைப்படம் “பாலை நிலம்”.

இதன் ட்ரெயிலர் அண்மையில் இடம்பெற்ற “குவியம் விருதுகள் 2022” நிகழ்வில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

ரத்னகாந்தன், அபர்ணா, ராஜா மகேந்திரசிங்கம், மகாலிங்கம், விமல் ரோய், ஷாஜா, லச்சா, விமலரூபன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தத்திரைப்படத்திற்கான இசை பிரசாந்த் கிருஷ்ணபிள்ளை. படத்தொகுப்பு நிவேன், கிராபிக்ஸ் தங்கவேல் சிவநேசன்.

படத்தின் ட்ரெயிலரை பார்க்கும் போதே புரிகிறது, எங்கள் பேச்சு வழக்கில் எங்கள் மண்வாசனையுடன் “பாலை நிலம்” தயாராகியிருக்கின்றது என்பதை. படத்தை இம்மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு முயற்சிகளை எடுத்து வருகின்றது. பாலை நிலம் படக்குழுவினருக்கு குவியம் இணையம் சார்பில் படம் வெற்றி பெற முற்கூட்டிய வாழ்த்துக்கள்.