தர்ஷன், இஷாங்க நடிப்பில் ஆதித்யாவின் “இன்னாம உருட்டு” பாடல்

337

Choc Box மற்றும் Z Major இணைந்து பெருமையுடன் வழங்கியிருக்கும் பாடல் “இன்னாம உருட்டு” (Innama Uruttu).

இந்தப்பாடலுக்கு எஸ்.முகுந்தன் இசையமைத்துள்ளதுடன், ராஜ்காந்த் நாதன் வரிகளை எழுதியுள்ளார். ஆதித்யா RK பாடலைப்பாடியுள்ளார்.

காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இந்தப்பாடலில் தர்ஷன் தவராஜா மற்றும் இஷாங்க அபயசேகர ஆகியோர் பிரதான பாத்திரங்களாக நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு டினேஷாந்த், படத்தொகுப்பு ஷிபான் அஹமட் மற்றும் டினேஷாந்த், கலை இயக்கம் பானுக பெர்னாண்டோ, நடன இயக்கம் நரேஷ் நாகேந்திரன், ஒப்பனை தனுஷா ஜெயசீலன். பாடலை அழகாக இயக்கியுள்ளார் H.A ஷிபான் அஹமட்.

பாட்டு, படமாக்கப்பட்ட விதம் என எல்லாமே நன்றாகவே இருக்கின்றது. குறிப்பாக ஒளிப்பதிவு மற்றும் அதனுடன் இணைந்த லைட்டிங் + கலை வேலைப்பாடுகள் அட்டகாசம். நடிப்பிலும் தர்ஷன், இஷாங்க மிளிர்கின்றனர். திரும்பத்திரும்பக் கேட்கக்கூடிய ஒரு பாடலாக இதை தந்த இசையமைப்பாளர் மற்றும் பாடகர் பாராட்டுக்குரியவர்கள்.

இந்தப்பாடலின் வெளியீட்டு விழா அண்மையில் கொழும்பு sapphire premiere திரையரங்கில் வெகு விமர்சையாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.