உணர்வுபூர்வமான குவேயின் “கண்ணம்மா” பாடல்

647

KM Cine Dreams, பொன் மஞ்சுளா தயாரிப்பில் பத்மயன் சிவாவின் இசையில் குவேந்திரனின் கவி வரிகளில் வெளியாகியுள்ள பாடல் “கண்ணம்மா”.

இந்தப்பாடலை புலி, கபாலி, பைரவா போன்ற திரைப்படங்களில் பாடிய புகழ்பெற்ற தென்னிந்திய பின்னணிப்பாடகர் அனந்து பாடியுள்ளார்.

காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இந்தப்பாடலை ஜான்ஸ் ஹென்றி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு ரிஷி செல்வம், படத்தொகுப்பு மணிவண்ணன்.

ஊரெழு பகி மற்றும் டில்கி திசாநாயக்க ஆகியோர் பிரதான பாத்திரங்களாக தோன்றி நடித்துள்ளனர். இவர்களுடன் பாடலாசிரியர் குவேந்திரனும் சிறு பாத்திரமேற்று நடித்துள்ளார்.

கலை இயக்கம் ஆதித்தன், நடன இயக்கம் துஷாந்தி, ஒப்பனை அகல் by ஷகி, வர்ணச்சேர்க்கை யசோதா தனுபம, டிசைன்ஸ் ரஜீவன்.

பாடலின் இசை, வரிகள், படமாக்கப்பட்ட விதம் எல்லாமே பாராட்டுக்குரியவை. குறிப்பாக குவேயின் உணர்வுபூர்வமான வரிகளுக்கு உயிர் கொடுத்த இசையமைப்பாளர் பத்மயன். அதனை தன் குரல் வழி மேலும் உயிர்ப்பூட்டிய பாடகர் அனந்து.. எல்லாமே காதுகளுக்கு விருந்து தான்.

இதனை கண்களுக்கும் விருந்தாக்க முயற்சித்த இயக்குனர் ஹென்றி, அவருக்கு பக்கபலமாக நடிகர் ஊரெழு பகி என்று காணொளியிலும் புதுமைகாட்டி இருக்கிறார்கள். கண் தெரியாதவராக நடிக்கும் பகியின் நடிப்பு, அவரது அண்மைய பாடல்களுடன் ஒப்பிடும் போது வித்தியாசமானது. நன்றாகவே நடித்திருக்கின்றார்.

டில்கி அழகுப்பதுமையாக வந்து போகிறார். சில உணர்புபூர்வமான காட்சிகளில் அவரது முகபாவங்கள் தத்ரூபமாக இருக்கின்றது. ஒளிப்பதிவில் ரிஷி மீண்டும் தன் பெயரைப்பதித்திருக்கின்றார் என்று தான் சொல்ல வேண்டும். பாடலின் உயிரோட்டத்திற்கு ஏற்ப காட்சிகளையும் நகர்த்தியிருக்கின்றார்.

மொத்தத்தில் ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கின்றது குவேயின் “கண்ணம்மா”.