புகாரி நளீர் இயக்கிய ‘கூலி’ குறும்பட விமர்சனம்

422

UAN கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நப்ஸான் ஒளிப்பதிவில், ஜாஸா அகமட் படத்தொகுப்பில், டொமினிக் பிரகாசின் இசையில் புகாரி நளீர் இயக்கிய “கூலி” குறும்படம் பற்றிய ஒரு பார்வை.

சிறப்பான கருப்பொருள் (Plot). கூலி வேலையில் உள்ள பிரச்சினைகள், கூலிக்காரர் குடும்பங்கள் படும் துயரங்கள் தொடர்பான கருவாக தெரிவு செய்யபட்ட குறும்படம். கதையாக்கலில் கொஞ்சம் (screen play) கவனித்திருக்கலாம். இதற்குள் இன்னும் கொஞ்சம் வலிகளை புகுத்தியிருக்கலாம்.

கதை நகர்வில் சலிப்பில்லை. இவ்வாறான கதைகளில் இறப்பு ஒன்று வழமையாகிவிட்டது. எதிர்பார்ப்பு நடந்தேறியிருக்கிறது. இறுக்கமான நகர்வு.

ஏழைக்குடும்பம் ஒன்று அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்ய முடியமால் தத்தளிக்கும் கதை. தகப்பன் பிள்ளைகளுக்கும் வீட்டு பொருட்களும் வாங்குவதாக கனவு காண்பார்.. பிள்ளை கனவு கண்டு எழ அப்பா??? முடிவடையும்.

கதை மாந்தர்களின் பாத்திர தெரிவு நல்ல பொருத்தமான தெரிவு.. இயக்குனருக்கு வாழ்த்துகள் கூறிவிடலாம்.. பிரதான பாத்திரமேற்ற அப்பா, முதலாளி, மகன், மகள் மனைவி சான்றாக கூறலாம்.

கதைக்களம் கூட நல்ல தெரிவு. இந்த படத்தின் சிறப்புக்களில் பின்னணி இசையும் இந்த படத்தின் உச்சம் எனலாம். ஆனால் ஒலி விளைவுகள் (sound effects) போதுமானதாக இல்லை. காட்சி கவ்வலில் (Cinematography) இன்னும் கொஞ்சம் மேம்படுத்தவேண்டும். அதற்கு பாத்திர நிலைநிறுத்தல் அவதானித்தால் அதுவும் சிறப்பாக இருந்திருக்கும்.

நடிப்பில் கவனம் செலுத்தியிருந்தாலும் வசனங்கள் சில இடங்களில் தேவையற்றதாக இருக்கிறது. சில சொற்களே.. செயற்கையாக (Artificial) இருக்கிறது. மகளின் கனவு காட்சியில் அதிகமாக தலை ஆட்டுவது கொஞ்சம் குறைத்து வேற்று முறை பார்த்திருக்கலாம். தரமான பாடலாக இருந்தாலும் கோர்க்கப்பட்ட இடம் மாற்றியிருக்கலாம்.

இயக்குநர் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். வெற்றியும் அடைந்திருக்கிறார். நல்ல படைப்பு தேவையற்ற அசைவு, சொற்கள், பாடல் கோர்த்த இடம், இப்படி சிலவற்றை கவனித்தால் இன்னும் வெற்றி பெறலாம். வாழ்த்துகள் கூலி படக்குழுவிற்கு..