இந்தியாவில் திரையிடப்படுகிறது தக்சனின் “யாளி“ திரைப்படம்!

445

Bharanee Cine Camp நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ”யாளி” திரைப்படம் எதிர்வரும் 18ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) சென்னை சாலி கிராமத்தில் அமைந்துள்ள ”பிரசாத் லேப்” இல் மாலை 6:00 மணிக்கு திரையிடப்படுகிறது.

Dhakshan Krish இன் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் மட்டக்களப்பின் பிரபல கலைஞர்களான இம்ரான், விஷ்ணுஜன், டரில் டியுக், டுஜா, கண்ணன், செபஸ்டின், மயுரா அரண், புஸ்பகாந், லுக்ஷான், அனுஷாந், கிறிஸ் டிலான், தினேஸ் நா உட்பட பலர் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

இப் படத்தின் திரையிடலுக்கு இந்தியத் திரைத்துறையைச் சேர்ந்த இமான் அண்ணாச்சி, நடிகர் பிரித்விராஜ், நடிகை பிரியதர்ஷினி, நடிகர் ஆதேஷ் பாலா, இயக்குநர் V.சேகர் மற்றும் அரசியல் பிரபலங்களான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தோழர் தியாகு உட்பட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளதோடு படத்தின் திரையிடலுக்கு வருகை தரவும் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த 28-08-2022 அன்று மட்டக்களப்பு விஜயா திரையரங்கில் இப்படம் வெளியிடப்பட்டு பின்னர் நுவரெலியா மாவட்டத்தில் பொகவந்தலாவையிலும் திரையிடப்பட்ட இப்படம் தற்பொழுது சென்னையில் திரையிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாளி திரைப்பட இயக்குனர் தக்சன் கிரிஷ் குவியத்துக்கு வழங்கிய நேர்காணலை வாசிக்க கீழ்வரும் இணைப்பைக் கிளிக் செய்யவும்.

சரியான விதத்தில் படங்களைக் கொடுத்தால் அதற்கான அங்கீகாரம் கிடைக்கும் – “யாளி” இயக்குனர் டக்ஷான்