குவியம் விருது பெற்ற யாழ். கலைஞர்களுடனான சந்திப்பு

248

குவியம் ஊடகத்தின் (Kuviyam Media) எதிர்கால செயற்பாடுகள் குறித்து விளக்கமளிக்கவும் ஆலோசனைகளைப் பெறவும் பல கட்டங்களில் சந்திப்புக்களை நடத்துவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.

அதற்கமைய, முதற்கட்டமாக “குவியம் விருதுகள் 2022” ஐ பெற்றுக் கொண்ட யாழ். கலைஞர்களுடனான சந்திப்பு அண்மையில் நாவற்குழியில் அமைந்துள்ள Hotel Honeymoon இல் இடம்பெற்றது. இதில் 20 இற்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது, குவியம் இணையத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன், “குவியம் விருதுகள் 2022“ இன் குறை, நிறைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. இதன் மூலம் அடுத்த வருடத்திற்கான விருது விழாவை எவ்வாறு மேலும் திறம்பட நடத்துவது என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

எமது குறுகிய கால அழைப்பை ஏற்று வந்து கலந்து கொண்ட எம் சினிமா கலைஞர்களுக்கும் அவர்களது ஆலோசனைகளுக்கும் நன்றிகள்.

இந்தச் சந்திப்புக்கான அனுசரணையை கனடா தமிழ் பசங்க, Bright moon production, Hotel Honeymoon மற்றும் கர்ணன் படைப்பகம் என்பன வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் கட்டமாக கிழக்கு மாகாணத்தில் இருந்து குவியம் விருதுகளைப் பெற்றுக்கொண்டவர்களுடனான சந்திப்பு மட்டக்களப்பில் விரைவில் இடம்பெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து யாழ். மாவட்ட சினிமா கலைஞர்களுடனான சந்திப்பு அடுத்த வருட முற்பகுதியிலும், தொடர்ந்து ஏனைய மாவட்டக் கலைஞர்களுடனும் சந்திப்புக்களை நடத்துவதற்கு குவியம் ஊடகம் திட்டமிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது குவியத்தின் பல்வேறு செயற்திட்டங்கள் குறித்த அறிவிப்புக்களும் விரைவில் வெளிவரும். எம் சினிமா கலைஞர்களுக்கான குவியத்தின் ஆதரவு என்றும் தொடரும்.. ஒன்றாக உயர்வோம்!

புகைப்படங்கள் – Studio Dream Warriors (அஜந்தன் சிவா)