எதிர்பார்ப்புமிக்க மதிசுதாவின் “வெந்து தணிந்தது காடு” திரைப்பட ட்ரெயிலர் வெளியானது!

246

15 நாடுகளின் 28 சர்வதேச விருதுகளை வென்ற ஈழத்தின் “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் எதிர்பார்ப்புமிக்க ட்ரெயிலர் இன்று (24) மாலை வெளியாகியது.

ஈழத்தின் முன்னணி இயக்குனரான மதிசுதாவின் இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படம்,

  1. உலக அளவில் சிவிலியன்கள் தொடர்பாக உருவாக்கப்பட்ட முதல் பங்கர் திரைப்படம்.
  2. ஐபோனில் உருவாக்கப்பட்டு வெளியாகும் முதலாவது இலங்கைத் திரைப்படம்.
  3. இலங்கை அளவில் அதிகளவான மக்கள் இணைந்து முதலிட்டுத் தயாரித்த திரைப்படம்.
  4. இலங்கை அளவில் அதிகளவான விருதைப் பெற்ற கைப்பேசித் திரைப்படம்.

போன்ற பல சிறப்புக்களைக் கொண்டுள்ளது.

இந்தத் திரைப்படம் அடுத்த வருடம் (2023) பெப்ரவரி மாதம் முதற்பகுதியில் வெளியாகும் என்ற மற்றுமொரு சந்தோஷ செய்தியையும் அறிவித்திருக்கிறார்கள்.

ஏற்கனவே, 203 பேரிடம் குழுமச் சேர்ப்பு மூலம் பெற்ற பணத்தில் மதிசுதாவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. படத்தின் வெளியீட்டுக்கு திரையரங்கை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட பல விளம்பரப்படுத்தல் வேலைகள் காத்திருப்பதனால், https://www.enkada.events/ta/vtk என்ற தொடுப்பினூடாகச் சென்று பணம் செலுத்தி இப்போதே நுழைவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாட்டையும் படக்குழுவினர் செய்திருக்கின்றனர்.

எனவே மதிசுதாவின் இந்த முயற்சியில் நீங்களும் பங்காளராகுங்கள். எங்கள் சினிமாவை நாங்களே வளர்ப்போம்!

தொடர்புடைய மற்றுமொரு செய்தி சென்சாரில் ‘பாஸ்’ – வெற்றிகரமாக திரையிட தயாராகிறது ஈழத்தின் ‘வெந்து தணிந்தது காடு’