ஜனா, மிதுஷா நடிப்பில் ”இந்த ஒரு பார்வையால” குறும்படம்!

306

INFILT MEDIA பிரதான தயாரிப்பிலும் FANTASY FICTION STUDIO இணைத்தயாரிப்பிலும் வெளிவந்துள்ள குறும்படம் “இந்த ஒரு பார்வையால”.

பிர்னாஷ் மற்றும் சமேஷ் சேர்ந்து இயக்கியுள்ள இந்தக்குறும்படத்திற்கான ஒளிப்பதிவு ரிஷான் அஸ்ரிப், படத்தொகுப்பு Sbmm ஆதில்.

ஜனாவின் கதை, வசனத்தில் ஜனா மற்றும் அருள்தாஸ் மிதுஷா ஆகியோர் நடித்துள்ளனர்.

விபரிப்பு (Narration) பாணியிலான கதை சொல்லலில் காதலை ரசிக்கும்படி இளமை ததும்ப எடுத்திருக்கின்றார்கள். நடிப்பும் நன்றாகவே இருக்கின்றது.

தொழில்நுட்பங்கள் தான் பெரியளவில் கை கொடுக்கவில்லை. அதற்கு இவர்கள் தேர்ந்தெடுத்த “பிஸி“யான படப்பிடிப்புத்தளமும் (திருக்கோணேஸ்வரம்) காரணமாக இருக்கலாம்.

இணையத்தின் துணையுடன் தான் பின்னணி இசையையும் கோர்த்துள்ளார்கள். பரீட்சார்த்த முயற்சி என்றளவில் பாராட்டலாம். இன்னும் மெருகேற்றுவதற்கு நிறைய இருக்கின்றது. நம்பிக்கை தரக்கூடிய இளம் படைப்பாளிகள், இந்தக் குறும்படத்தை முதற்படியாக வைத்து முன்னேற வாழ்த்துக்கள்.