ரொரன்ரோவை அடுத்து மொன்றியலில் திரையிடப்படவுள்ள Ps சுதாகரனின் “ஒருத்தி 2”

163

கனடிய ஐரோப்பிய தமிழக தமிழீழ கலைஞர்களின் ஒன்றிணைவில் உருவாகியுள்ள Ps சுதாகரனின் “ஒருத்தி 2” திரைப்படம் அண்மையில் கனடாவின் ரொரன்ரோ நகரில் திரையிடப்பட்டு பலரது வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், மொன்றியல் நகரில் எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதி இந்தத்திரைப்படத்தினை திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி அன்று மாலை 7 மணிக்கு Cine Starz Cinema என்ற திரையரங்கில் படம் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

குறித்த காட்சிக்கான டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து கொள்வதற்கும் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும் 416 720 9303 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் முதல் முறையாக ஒரு தமிழ் திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக “ஒருத்தி 2” உருவாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.