துரோகத்தின் வலி – பிரதீப்பின் “குற்றவாளி” பாடல்

337

கனடா தமிழ்‌‌ பசங்க (CTP) நிறுவனத்தின் தயாரிப்பில் அண்மையில் வெளியாகியிருந்த பாடல் “குற்றவாளி”. இதன் முதற்பார்வையே (First look) எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. பாடலும் எதிர்பார்ப்புக்குச் சற்றும் குறைவில்லாமல் வந்திருக்கின்றது.

இந்த பாடலுக்கான வரிகளினையும், இயக்கத்தினையும் பிரதீப் செய்துள்ளதோடு‌‌ பாடலுக்கான இசையினை அனுசன் நாகேந்திரனும்,‌ இசைக் கலவையினை‌ ஜெரோன் அவர்களும்,‌ ஒளிப்பதிவு மற்றும் தொகுப்பினை ஆதி‌ AOD அவர்களும்‌ செய்துள்ளனர்.

பிரதீப், ஹரிகரன், மிதுலன், நிதுஷான் ஆகியோர் இதில் தோன்றி நடித்துள்ளனர்.

“தாரம் எது தாசி எது அறியாத மனங்கள்
என் தவழும் வயதில் தடுமாற்றம்
தடம்மாறி திசைமாறி மனத்திரையில் ஊசலாடிய எண்ணங்கள்
நிஜத்திரையில் காணல் நீராய் கரைந்து போனது..”

இது போன்ற கூர்ப்பான வரிகளும் அதை அழுத்தமாக உச்சரிக்கும் ராப் இசையும் பாடலின் பல இடங்களில் “அட” போட வைக்கிறது. பிரதீப்பின் வரிகள் கூர்மை.

கலை இயக்கமும், ஒப்பனையும் பாடலுக்கு பக்க பலம். குற்றவாளிக்கூண்டு, அதைக் காட்சிப்படுத்திய விதம் என ஒளிப்பதிவும் அருமை. ஒரு இளம் படைப்பாளிகள் குழு இந்தப்பாடலைச் செய்திருப்பதாக அறிகின்றோம். பாடலின் தரம் அவர்கள் வயதை அல்ல; திறமையைக் காட்டுகின்றது. வாழ்த்துக்கள் பாடல் குழுவினருக்கு..

Production : Canada Tamil Pasanga
Music : Anushan Nagendran
Lyrics & Vocals : Piratheep
Concept and Direction : Piratheep
Mix and mastering : Jerone B
DOP & Editing : Aathy Aod
Art Direction : Piratheep
Cast: Piratheep | Hariharan | Mithulan | Nithushan