சமூக மாற்றத்தை நோக்கிய ”விட்டில் பூச்சிகள்” குறும்படம் – ட்ரெயிலர் வெளியானது

1000

யாழ். கிரியேஷன்ஸ் தயாரிப்பில் கிருஷ்ணன் டிலக்சன் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள குறும்படம் “விட்டில் பூச்சிகள்”. இதன் ட்ரெயிலர் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்திற்கான ஒளிப்பதிவை துஜீபன், கிருத்திகன், சந்தோஷ் ஆகியோர் மேற்கொண்டுள்ளதுடன், படத்தொகுப்பை டிலக்சனும் மேற்கொண்டுள்ளனர். நம் நாட்டின் முன்னணி இசையமைப்பாளரான சிவா பத்மயன் இதற்கு இசையமைத்துள்ளார்.

LN லது, SJ ராம், இதயராஜ், உதயராஜன், நிலானி, வாணி, ராகவன், விமல், RS பிரகாஷ், ST தேனு, JS ஜசோ, NL நிது, டானி, செனுஜன், அஸ்வின், கிடார், இந்து, அபிநயன், ஷனுஜன், ராசி, தபிலன், ஷாலு ஆகியோர் நடித்துள்ளனர்.

எம் சமூகத்தில் அண்மைய காலமாக அதிகம் பேசப்படும் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான ஒரு படமாக “விட்டில் பூச்சிகள்” குறும்படம் அமையும் என ட்ரெயிலரை வைத்து புரிந்து கொள்ள முடிகிறது.

நிச்சயமாக இவ்வாறான விழிப்புணர்வு குறும்படங்கள் வரவேற்கப்படக்கூடியன. இளையவர்கள் இதுபற்றி பேச விளைந்திருப்பது ஆரோக்கியமானதும் கூட. வாழ்த்துக்கள் படக்குழுவினருக்கு.. We are waiting..

டிசம்பர் 18 WOODSIDE CINEMA வில்.. ஒருத்தி 2