இருக்கு.. ஆனா இல்ல.. ஆதவனின் சைக்கோ த்ரில்லர் “மாயத்திரை” குறும்படம்

439

In Focus Studio தயாரிப்பில் ஆதவன் வரதராஜன் இயக்கத்தில் வெளியாகியுள்ள “சைக்கோ த்ரில்லர்” வகையறா குறும்படம் “மாயத்திரை”.

இதன் ஒளிப்பதிவை சயன் சிவகுமாரும், படத்தொகுப்பை மயூரகாந்த் காசிநாதன் ஆகியோரும் மேற்கொண்டுள்ளனர். Tharindu Madhawa Thotagamuwa இசையமைத்துள்ளார்.

ஆதவன் வரதராஜன், அபி லக்ஷ்மண மற்றும் தனுராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

தன்னோட உலகத்தில தான் பார்க்கிறது, கேக்கிறது எதுவுமே உண்மை இல்லை என்று வாழுற.. மனநிலை பாதிக்கப்பட்ட ஒருத்தனை சுற்றி நடக்கிற விசயங்களை மையமாக வைத்து இந்தக்குறும்படம் இயக்கப்பட்டிருக்கு.

“சைக்கோ த்ரில்லர்” வகையறாக்குள் பொருந்தக்கூடிய மாதிரியான காட்சிகள். அதற்கு ஏற்ப மிரட்டும் இசை, அற்புதமான கமெரா என எடுத்துக்கொண்ட கதையை சிறப்பாக தந்திருக்கிறார்கள்.

இந்தக் குறும்படம் அண்மையில் இடம்பெற்ற Agenda 14 குறும்படத்திருவிழாவில் தேர்வாகி இருந்ததுடன், கடந்த 8 ஆம் திகதி Goethe – Institute இல் திரையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.