சிவி லக்ஸின் புதிய பாடல் “வெண்மதியே”

913

கனடா தமிழ் பசங்க (CTP) தயாரிப்பில் சிவி லக்ஸ் இன் இசை மற்றும் குரலில் அண்மையில் வெளிவந்துள்ள பாடல் “வெண்மதியே”.

இந்தப்பாடலை யதுகுலன் எழுதியுள்ளதுடன் சிவியுடன் இணைந்து திஷானி பாடியுள்ளார்.

பாடலுக்கான ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு இலங்கேயன் பிக்சர்ஸ் ரெஜி செல்வராசா. ஒலிக்கலவை ஷமீல் ஜே. நடன இயக்கம் ஊரெழு பகீ (Vibrate Dance Crew)

புதுமுகங்களான யதுகுலன் மற்றும் டில்மி மதுராங்கி ஆகியோர் பிரதான பாத்திரங்களாக நடித்திருக்கும் இந்தப்பாடலை கிராமிய மண்வாசனையுடன் அரவின் ரமணன் இயக்கியுள்ளார்.

“உடுப்பிட்டி பெண்ணே..” என்று ஆரம்பிக்கும் இந்தப்பாடல் உடுப்பிட்டி பிரதேசத்திலேயே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கோயில் திருவிழாவுக்கு வரும் பெண்களை சைட் அடிப்பது என்பது விடலைகள் முதல் இளைஞர்கள் வரை பலரது இளமைக்கால நினைவுகள்.

அப்படி ஒரு விடயத்தை வைத்து இந்தப்பாடலை இயக்கியிருக்கின்றார்கள். நடன இயக்கம், ஒளிப்பதிவு என எல்லாமே ரசிக்கும் படி உள்ளது. நிஜமான திருவிழா போன்ற பின்னணியில், பலருடன் இந்தப்பாடலை எடுத்திருந்தால் இன்னமும் இயல்பாக இருந்திருக்கும்.

சிவி லக்ஸின் மெலோடி ரசிக்க வைக்கிறது. ராப் இசைப்பாடகரான பல பாடல்களை தந்தவர் இதில் காதல் மெட்டிசைத்து கவர்ந்துள்ளார்.