பிரகாஷ் ராஜாவின் மிரட்டும் “வனவேட்டை 2“ ட்ரெயிலர்

512

வனவேட்டை என்ற குறும்படத்தை தந்த குழுவினர் தற்போது “வனவேட்டை 2” என்ற குறும்படத்துடன் களமிறங்கியிருக்கிறார்கள். இதன் ட்ரெயிலர் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

பிரகாஷ் ராஜாவின் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தக்குறும்படத்திற்கான ஒளிப்பதிவினை குலசிங்கம் பிரதாப் (biruntha studio) உம் படத்தொகுப்பினை செல்வராஜ் தனுசனும் மேற்கொண்டுள்ளனர்.

நவம், ஜக்சன், விதுசன், கீர்த்தனா, விஜயகுமார், மனோ, கமல், கார்த்தி தேனுஷன், கஜானன், தீபன், லிங்கம், பிரியங்கன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படம் குறித்து இயக்குனர் தனது பேஸ்புக் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார், வன்னிப்பிரதேசத்தில் ஒரு திரைப்படம் எடுப்பதற்கு என்னபாடுபட வேண்டும் என்பது என்னோடு பயணிப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். சில நாட்கள் காட்டிலே முகாமிட்டிருந்து கொட்டுகிற மழையில் நனைந்தும் சில நேரங்களில் உணவில்லாமல் கூட 50 க்கு மேற்பட்டவர்களை வைத்து வனவேட்டையின் இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்திருந்தேன்.

பல இலட்சங்களை வைத்து ஒரு திரைப்படத்தை உருவாக்கும் வசதி எம்மிடம் இல்லையென்றாலும் கையில் இருக்கும் சிறு தொகைக்கேனும் எங்களால் முடிந்தளவு முயற்ச்சி செய்து பல சவால்களுக்கு மத்தியில் உருவாக்கிய குறுந்திரைப்படமே ‘வனவேட்டை 2’

எந்தளவுக்கு எங்களுடைய சினிமாப் படைப்புக்களும் எல்லோரிடம் போய் சேரவேண்டுமென்பது உங்களின் கைகளில் தான் இருக்கிறது’