எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டிர்திஹாவின் “லக்ஷ்மி எனும் பொதுமகள்” குறும்படம்

1414

Sheya Production சார்பில் நிருபா விவேகானந்த் தயாரிப்பில் விவேக் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் குறும்படம் “லக்ஷ்மி எனும் பொதுமகள்”. இதன் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் குறும்படத்திற்கான ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் வர்ணச் சேர்க்கை பணிகளை ராதேயன் கவனித்துள்ளார். மாட் சாமி இசையமைத்துள்ளார். ஒலிக்கலவை அனுஷன் நாகேந்திரன்.

டிர்திஹா பிரதான பாத்திரமேற்று நடித்திருக்கும் இதில் ஆனந்த், சேகர், ஷெஹானி, பேபிபி ஷெயாலினி ஆகியோர் நடித்திருக்கின்றார்கள். உதவி இயக்கம் – எச்.ஏ.ஷெஹானி, உதவி ஒளிப்பதிவு – ஜனா ஆர்ஜே. அனிமேஷன் – அரவிந்த்.

இந்தக்குறும்படத்தின் போஸ்டர் வந்தபோதே நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பையெல்லாம் பூர்த்தி செய்யும் அளவில் படம் இருக்கும் என்பது டீசரை பார்க்கும் போது தெரிகின்றது.

பெண்ணொருத்தி புகைக்கும் காட்சியுடன் விரியும் டீசர் அடுத்தடுத்து பல செய்திகளை சொல்லிப்போகிறது. அந்தப் பெண் யாரென்பது புரிந்தாலும், ஏன் அவள் அப்பிடி இருக்கிறாள்? என்பதை தெரிந்து கொள்ள படம் வெளியாகும் வரை காத்திருக்க தான் வேண்டும். வாழ்த்துக்கள் படக்குழுவினருக்கு..