ஜனவரி 20 இல் அவுஸ்ரேலிய திரையரங்குகளில் வெளியாகும் நம்மவர் திரைப்படம் “பொய் மான்”

376

Shobhanam Creations தயாரிப்பாக டொக்டர் ஜெயமோகன் எழுத்து, இயக்கத்தில் அவுஸ்ரேலியாவில் உருவாக்கப்பட்ட “பொய் மான்“ திரைப்படம் எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி முதல் அவுஸ்ரேலிய திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளராக R Poudel உம், படத்தொகுப்பாளர்களாக ஆர்.செந்தில்குமார் மற்றும் ஹரீஸ் உட், இசையமைப்பாளராக (பின்னணி) நிஷாதனும் பணியாற்றியிருக்கிறார்கள்.

பாடல்களுக்கு சாரு ராம், ஆதி, குரு ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். பாடல் வரிகளை குவேந்திரன், ஜெயமோகன், ஆதி ஆகியோர் எழுதியுள்ளனர்.

ஜனார்த்தன், காவியா, ஜெயமோகன் மற்றும் ஷர்மினி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளார்கள்.

மேடை நாடகங்கள் மூலம் புகழ்பெற்ற வைத்திய கலாநிதி ஜெயமோகன் இதற்கு முன்பதாக ‘ஒருகப்புச்சீனோ காதல்’ மற்றும் ‘எறிவளை தடு’ ஆகிய குறும்படங்களை இயக்கி பலரது கவனத்தை ஈர்த்தார்.

இந்நிலையில், அவரது இயக்கத்தில் வெளிவரவுள்ள இந்தத் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Production : Shobhanam Creations
Movie : Poi Maan
Cast : Janarthan, Kavija, Jayamohan and Sharmini
DOP : R Poudel
Editing : Senthilkumar R and Harish
Di Colorist : R Delepan
Art Direction : Shaminine C
BGM : Nishadhan S
Music (Songs) : Charou Ram , Aathi, Guru P
Lyrics: Bharathiyaar, Kuventhiran, Jayamohan, Aathi
Singers : Kalaimamani Bhushany kalyanaraman, Gire , R.P Shravan( Super Singer), Athi
Written & Directed by : J Jayamohan