இயக்குனர் லெனின் எம்.சிவம் பங்கேற்கும் SCRIPT DEVELOPMENT தொடர்பான MASTERCLASS – JICF

225

யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழாவின் 8 ஆவது அங்கம் யாழ்ப்பாணத்தில் தற்சமயம் வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

இதன் ஒரு அங்கமாக இடம்பெறும் Masterclass ஒன்றில் இம்முறை இயக்குனர் லெனின் எம்.சிவம் (கனடா) வளவாளராக பங்கேற்கிறார். இதில் Script development தொடர்பில் அவர் பல விடயங்களை பகிர்ந்து கொள்ளவுள்ளார்.

இந்த வகுப்பு நாளை (07) காலை 9.30 மணி முதல் 1.00 மணி வரை இல.50, கண்டி வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ‘Kalam’ எனும் இடத்தில் இடம்பெறவுள்ளது.

இதில் பங்கேற்க விரும்புபவர்கள் jaffnaicf@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் விபரங்களை அனுப்பி பதிவு செய்ய முடியும்.