வேலில போற ஓணான வேட்டிக்க விட்ட கத “வாலீப வயS” பாடல்

296

Rap Ceylon தயாரிப்பில் பிரமாண்டமாக வெளிவந்திருக்கும் பாடல் “வாலீப வயS”. திஷோன் விஜயமோகனின் இசையில் உருவாகியுள்ள இந்தப்பாடலுக்கான ராப் வரிகளை வாகீசன் (தமிழ்), Ezekiel (ஆங்கிலம்) ஆகியோர் எழுதியுள்ளனர்.

திஷோன், அட்விக், வாகீசன் பாடலைப்பாடியுள்ளனர். இசைக்கலவையை பசான் லியனகே (RedFox Studio) செய்திருக்கின்றார். பாடலை அருள்தேவா, நிரோஷன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளார்கள்.

காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இதனை அன்ரன் Co இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு ரங்க SB, படத்தொகுப்பு ஷானக நிமேஷ், ஒப்பனை பிரியந்த திசாநாயக, டிஷைன்ஸ் மதுஷ் JM.

“வாலீப வயஸ்” பெயரைப்பார்த்ததுமே புரிந்திருக்கும் இது இளசுகளுக்கான பாடல். நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பிரபலமான “ஏன்னா இது வாலிப வயசு” என்கிற வரிகளுடன் ஆரம்பிக்கும் பாடல் அப்படியே ஏ.ஆர்.ரஹ்மானின் “ரெலிபோன் மணிபோல்..” பாடலின் சரணத்துடன் தொடர்ந்து வாகீசனின் ராப் வரிகளுடன் உச்சம் பெறும்.

பாடல் வரிகளை யு-ரியூப்பில் பகிர்ந்திருக்கிறார்கள். வாசித்துப்பாருங்கள். பல உள்ளுர் இளைஞர்களின் தவிப்பு அதில் புரியும். 90s கிட்ஸ் – 2K கிட்ஸ் இன் பரிதாபங்கள் விளங்கும். இதுவொரு இளமைத்துள்ளலான பாடல். பல்வேறு ஜோனர்களில் பாடல்களைத் தந்துகொண்டிருக்கும் ராப் சிலோனின் ஜாலியான சரவெடி இது.

“வேலில போற ஓணான வேட்டிக்க விட்ட கத“ தான் இப்ப பலரது நிலமையாகவும் இருக்கு. இந்தப்பாடலிலும் அது பல தடவை சொல்லப்படுது. புரிஞ்சா சரி!