அமில பெரேரா – நவயுகா இணைவில் “வேட்டை” பாடல்

288

சகோதமொழி கலைஞராக இருந்து கொண்டு தமிழில் பல பாடல்களை தந்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் இசைக்கலைஞரான அமில பெரேரா.

இவரது இசையில் அண்மையில் வெளிவந்துள்ள பாடல் “வேட்டை” VETTAI – THE TREASURE HUNT. இந்தப்பாடலுக்கான வரிகளை எம்.சி.ஆஷா எழுதியுள்ளதுடன் அமில பெரேரா, ஷிராஸ் (Rude Bwoy) மற்றும் ரொக் நிஷா ஆகியோர் பாடியுள்ளனர்.

காணொளிப்பாடலாக உருவாகியுள்ள இந்தப்பாடலை நம் நாட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நவயுகா குகராஜா இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு ரமேஷ் ராசாஞ்ஜனா. படத்தொகுப்பு மற்றும் வர்ணச்சேர்க்கை டெவோன் விக் (Dark Mirror)

சிந்தர் அமிர்தலிங்க, எம்.சி.ஆஷா, ஷாஷா கிரேஷ், டிகிரிகென்னகா மற்றும் பவிதன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர். ABC RECORDZ இதனைத் தயாரித்துள்ளது.