சஜய் ARS இசையில் டிலோஜன் இயக்கத்தில் “சீன் போடாதடி” பாடல்

657

Kisha Film Makers & Wax Wing Productions தயாரிப்பாக வி.டிலோஜனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் பாடல் “சீன் போடாதடி”.

இந்தப்பாடலுக்கு சஜய் ARS இசையமைத்துள்ளதுடன் அவரே வரிகளை எழுதிப்பாடியுள்ளார். ராப் வரிகள் மற்றும் குரல் ருத்ரா கபி. ஜசோமிதா ஜெயராசா மற்றும் வேதிகா ஆகியோர் மேலதிக குரல்களாக இணைந்திருக்கிறார்கள்.

காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இந்தப்பாடலில் சங்கீத், சாஜினி ரோய், ஏ.ஆர்.ஹரிஸ், சேது, மனீஷா மற்றும் உதாரி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். திரிஷாந்தன் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளதுடன், டிலோஜன் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார்.

பாடலுக்கான நடன இயக்கம் ஏ.ஆர்.ஹரீஷ் மற்றும் சேது, (Classical Dance) ஷர்மினி சுதாகரன், கணனி வரைகலை கபிலேஷன், டிஸைன்ஸ் பிரசாந்த்.

பாடலைப்பார்க்கும் போதே புரிகின்றது பாடலுக்காக நிறையவே உழைத்திருக்கிறார்கள். கிழக்கிலங்கையின் கல்முனையைச் சேர்ந்த பாடல்குழு இதனை நுவரெலியாவில் காட்சிப்படுத்தியிருப்பதுடன், தமிழ் கலைஞர்களுடன் சகோதர மொழிக்கலைஞர்களும் இதில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பாடல் இசை மற்றும் நடன இயக்கம் என அனைத்துமே நன்றாக இருக்கின்றது. வெறும் டூயட்டாக இல்லாமல், அதற்குள் ஒரு திரைக்கதையை அமைத்து ரசிக்கும் படி காட்சிப்படுத்தியுள்ளது பாடல் குழு.