பொங்கல் அன்று வெளியாகும் “அம்மா” பாடல்

375

US Productions Canada தயாரிப்பில் “நாங்க மீடியா” வழங்கும் “அம்மா” பாடல் எதிர்வரும் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என பாடல் குழு அறிவித்துள்ளது.

உதய் பிரகாஸின் இசையில் உருவான இந்தப்பாடலை அவருடன் இணைந்து ஷர்மி நாகலிங்கம் பாடியுள்ளார். பாடல் வரிகளையும் ஷர்மியே எழுதியுள்ளார்.

காணொளியாக வெளியாகவுள்ள “அம்மா“ பாடலை மாதவன் மகேஸ்வரன் இயக்கியிருப்பதுடன் சேனாதி சேனா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரஷிகா அருள்செல்வம் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார்.