வேட்டைக்குத் தயார் – கோடீஸ்வரனின் “சங்காரம்” திரைப்பட ட்ரெயிலர் வெளியாகியது

324

Bharanee cine camp சார்பில் பரணீதரன் சுந்தரமூர்த்தி தயாரிப்பில் கோடீஸ்வரனின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் “சங்காரம்”. இதன் அசத்தலான ட்ரெயிலர் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படத்திற்கான ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் VFX பணிகளை கணேசலிங்கம் புஷ்பகாந்த் மேற்கொண்டுள்ளதுடன் இசை, ஒலிக்கலவை மற்றும் SFX பணிகளை ஷங்கர்ஜன் ஜெயவரதராஜன் கவனித்துள்ளார்.

போஸ்ரர் வடிவமைப்பாளராக Tn சதீஸூம், இணை இயக்குனராக ஜானிதனும், கலை இயக்குனராக Abd செபஸ்டீன் அகிலவும் பணியாற்றியுள்ளதுடன் ஒப்பனை பணிகளை TK saloon உம் மேற்கொண்டுள்ளது.

சங்காரம் திரைப்படத்தில் “Batti Super star” ஜனா RJ, திவ்யா, கிஷோ கண்ணன், பில்லா பீமா, ABD செபஸ்டீன், புஷ்பகாந்த், கிருஷிகா, ருத்ரா, வைஷாலி ராஜா, தில்கஷா, அஜித், Sk சசி, யுவன் தங்கராசா, டிவேதனா, கதிரவன், இன்பராசா, பூபாலசிங்கம், வரதகரன், ரகுதாஸ், லோஜினி மகேந்திரா, புகழாரனி, லாவண்யா, முகேஷ் கண்ணா, பேருஷன், அனுமிகா, அகிஷ்னிகா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

ட்ரெயிலரை பார்க்கும் போது இதுவொரு அக்ஷன் – த்ரில்லர் திரைப்படமாக இருக்கும் என ஊகிக்க முடிகின்றது. கூடவே இயக்குனர் கோடீஸ்வரன் ஸ்டைலில் சமூகத்திற்கு நல்லதொரு விழிப்புணர்வை கொடுக்கக்கூடிய படமாகவும் இது இருக்கும் என எதிர்பார்க்கலாம்.