16ஆம் திகதி மட்டக்களப்பில் ‘ஒமேகா’ திரைப்பட இசை வெளியீடு!

189

மட்டக்களப்பு மாவட்டத்தை தளமாக கொண்டு இயங்கி வரும் ‘அ’ கலையகத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஒமேகா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் 16 ஆம் திகதி (திங்கட்கிழமை) மாலை 4.30 மணிக்கு மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கிறேசன் பிரசாந் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்திற்கு ஏ.என்.அன்ரூ இசையமைத்துள்ளார்.

கடந்த வருடம் செப்டெம்பர் 8ம் திகதி இத்திரைப்படத்தின் Title மற்றும் poster வெளியீடு இடம்பெற்றிருந்ததுடன் ஒமேகா திரைப்படத்திற்கான படப்பிடிப்புக்கள் 30 நாட்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல கலைஞர்களுடன் புதுமுக கலைஞர்களும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

‘ஒமேகா’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலைஞர்கள், கலை ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளதுடன் இசை மற்றும் திரைப்படத்துறையில் ஆர்வமுள்ள அனைவரையும் திரைப்படக்குழுவினர் விழாவிற்கு அழைக்கின்றனர்.