சிவி லக்ஸ் இன் “TEA” பாடல் ஜன. 24 அன்று வெளியாகிறது

1410

நம் நாட்டின் முன்னணி ராப் இசைக்கலைஞர் சிவி லக்ஸ் இன் இசை மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் “TEA – சொல்லப்படாத கதை” பாடல் எதிர்வரும் 24 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக பாடல் குழு அறிவித்துள்ளது.

ARC Mobile தயாரிப்பாக வெளிவரும் இந்தப்பாடலை அஞ்ஜெலிகா பாடியுள்ளதுடன் ராப் வரிகளை சிவி லக்ஸ் மற்றும் APA அருண் ஆகியோர் பாடியுள்ளனர்.

காணொளிப்பாடலாக வெளிவரும் இப்பாடலில் நவின், துஷா, ஹரி, கமலி, டினேஸ், சிவகாந்தன், சந்தோஷ் மற்றும் நண்பர்கள் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு தேவ், படத்தொகுப்பு ரெஜி செல்வராசா, ட்ரோன் ஷனோ, கலை இயக்குனர் கனே பென்னி, உதவி இயக்குனர் ஜீவன், போஸ்டர் டிசைன் TN சதீஸ்.

இரத்தம் தோய்ந்த டைட்டில் (TEA) வடிவமைப்பே பாடல் சொல்ல வரும் சேதியை தெளிவாக சொல்லிப்போகிறது. உதிரம் சிந்தி உழைக்கும் வர்க்கத்தையும், அதன் உழைப்பைச் சுரண்டி ஏமாற்றும் கூட்டத்தையும் பாடலில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் என்பது டீசரை பார்க்கும் போதே புரிகின்றது.

காத்திரமான படைப்பாக இது இருக்கும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துக்கள் பாடல் குழுவிற்கு..

Production – ARC Mobile
Music , Story , direction – Cv laksh
Singer – Angelica
Rap – Cv laksh, APA Arun
Cast – Navin, Thusha, Hari, Kamali, Dinesh, Sivakanthan, Santhosh & Friends
Assistant Director – Jeevan
Art director – Gane Benny
Cinematography – Dev
Drone – Shano
Editing – Reji Selvarasa
Poster Design – TN sathies