சுவிகரன் சமைத்த கம கம மீன் குழம்பு “ஆர்கலி”

369

i production ஜொனி தயாரிப்பில் இளமாறன் இசையில் சுவிகரன் Msk இயக்கத்தில் கனடா தமிழ் பசங்க (CTP) வெளியீடாக வந்திருக்கும் பாடல் “ஆர்கலி”.

இந்தப் பாடல் காதலையும் தாண்டி சமூக அக்கறை கொண்ட ஒரு பாடலாக வெளிவந்திருக்கிறது. அதற்கு முதலில் பாராட்டுக்கள்.

கடலுக்கு போய் வந்த ஆடவன் மீன் வாங்க வரும் கன்னி பொண்ணு மீது காதல் கொண்டு பாடும் பாடல் தான் ஆர்கலி. அந்த பொண்ணுக்காக தன்னையும் தன் பழக்கங்களையும் விடும் ஆடவன் சிறப்பு. காதல், சமூக அக்கறை, வியாபாரம் என சிறப்பாக படைக்கப்பட்டிருக்கிறது.

பாடலை எழுதியிருக்கிறார் ஜொனி. அவரது எழுத்துக்கு ஏற்ப கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது. பாடலுடன் சேர்ந்து வரும் வசனங்களும் நச்.

கடலை அண்டிய வாழ்வியலுக்கு ஏற்ப ஈர்க்க கூடிய இசையில் சிறப்பாக பாடலை ஆக்கியிருக்கிறார். மீனை கொடுத்தால் அதை கறிசமைக்க வேண்டுமே. அதை இசையமைப்பாளர் இளமாறன் செய்திருக்கிறார். தென்னிந்தியாவில் அவருக்கு கிடைத்திருக்கக் கூடிய இசைத்துறை சார்ந்த அனுபவங்கள் பாடலினூடு வெளிப்படுகிறது.

பாடகர்களை சிறப்பாக்கி இருக்கிறார். பாடகர்களான அருள் பிரகாசம், தரு மற்றும் பிரநிதி சிறப்பாய் பாடியிருக்கிறார்கள்.

கதாநாயகனாக நடித்த சுவிகரன் இயக்குனர் பணிச்சுமையையும் தாண்டி நடிப்பில் அசத்துகிறார். சகோதரமொழி நாயகி டில்கியும் சிறப்பு. 6000 ரூபா மீனை 2000 க்கு கொடுத்த போது ஆதிக்கு ஏற்பட்ட சலிப்பை கொஞ்சம் கூட்டியிருக்கலாம். ஆதியும் சிறப்பாய் செய்திருக்கிறார்.

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு போன்றவற்றில் சிரத்தையோடு செயற்படும் ஒரு கலைஞராக கதிரை பார்ப்பதுண்டு. இதிலும் அவர் அந்த எதிர்பார்பை வலுப்படுத்தியிருக்கிறார்.

களம், காட்சிகள், நடிகர்கள், ஒளிப்பதிவு, தொகுப்பு என எல்லாவற்றையும் சிறப்பாய் செய்திருக்கிறார். என்ன நாயகி மீனை தூக்கி பிடிக்க வைக்க கடினப்பட்டிருக்கிறார். காட்சிகள் வேகம். அதனையும் கவனித்திருக்கலாம். நாயகன், நாயகியை தவிர ஏனையோர் முகம் அவ்வளவு பதியவில்லை.

ஐ புரொடக்ஷன்ஸ் தயாரித்து CTP விநியோகித்த கம கம மீன் குழம்பு ஆர்கலி. இது ஆற முன் நீங்களும் சுவைத்திடுங்கள்.

Music Composed by ilamaran
Singers: Arul Pragasam, Praniti, Dharu
Distributed by Canada Tamil Pasanga (CTP)
Produce by i production ( Jony )
Director : Suvikaran MSK
Lyricist : Jony
Cast : Msk | Dilki Dissanayake | Aadhi | Shaja | Kumar
Dop, Edit & DI : Kathir
Camera Assistant : Kemal
Assistant Directors: Vinoth | Victoria
Art director : Jenistan
Makeup: Derian
Costumer : Jenifar | Abisha
Production Manager: Sharon
Production Assistant: Nalliya Kajeepan
Publicity Design: Charan B (Atlaaya)