காதலர் தினத்தை முன்னிட்டு நம் நாட்டு – தென்னிந்தியக் கலைஞர்கள் கூட்டிணைவில் மாபெரும் இசை நிகழ்வு

753

காதலர் தினத்தை முன்னிட்டு “HM BROTHERS CAR SALES” பெருமையுடன் வழங்கும் மாபெரும் இசை திருவிழா மற்றும் கலை நிகழ்வுகள் (Lover’s day mega night) எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி யாழ்ப்பாணம் TILKO HOTEL ல் இடம்பெறவுள்ளது.

இதில், தென்னிந்திய நட்சத்திர நடிகர்களான வில்லன் நடிகர் சாய்தீனா, நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான ரோபோ சங்கர் மற்றும் விஜய் டிவியின் குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் ஊடாக அனைவர் மனதிலும் இடம் பிடித்த பிரியங்கா சங்கர், தளபதி விஜய்யின் “பிகில்“ திரைப்படம் ஊடாக பாண்டியம்மாவாக அவதரித்த இந்திரஜா சங்கர் ஆகியோரும், நடிகையும் விஜய் டிவி பிரபலமுமான ஸ்ருதிகா அர்ஜூனும் சிறப்பு விருந்தினர்களாகவும் கலை நிகழ்வுகளின் அன்பாளர்களாகவும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

இவர்களுடன் இசை விருந்திற்காக பின்னனி பாடகர்களான “சூப்பர் சிங்கர்” புகழ் பூவையார், அஜய் கிருஷ்ணா, ஶ்ரீ நிஷா உட்பட பலரும் கலந்து கொள்கின்றனர்.

அதுமட்டுல்லாது எமது பெருமைக்குரிய இளம்தலைமுறையின் தாயக கலைஞர்களான RAP CEYLON குழு (வாகீசன் இராசையா, திசோன், ஆத்விக்) மற்றும்
இன்னும் பல ஈழத்து பாடகர்கள் இணைந்து SN MUSIC BAND ஶ்ரீ நிர்மலன் இசையுடன் சங்கமிக்கும் மாபெரும் இசை இரவாக இது இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வுக்குப் பிரதான அனுசரணையாளர்களாக யாழ்பாணத்தின் பிரம்மாண்ட “ஸ்டார் புட் சிட்டி“யும், “அல்லை ரெசோட்“ மற்றும் பிரலப ஸ்வீட்ஸ் அங்காடி
“வின் ஸ்வீட்ஸ்” நிறுவனமும், “டில்கோ ஹோட்டலும்” இணைந்து கொள்கின்றனர்.

பிரதான ஊடக அனுசரணையாளர்களாக தமிழ் FM வானொலி, வீரகேசரி பத்திரிகை, தினக்குரல் பத்திரிகை ஆகியனவும் குவியம் மீடியா உட்பட பல இணைய ஊடகங்களும் இணைந்திருக்கின்றனர்.

மேலும் அனுசரணையாளர்களாக இலங்கையிலும் மற்றைய சர்வதேச நாடுகளிலும் இயங்கிவரும் பிரபல நிறுவனங்களும் இணைந்து கொள்கின்றனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் காதலர்களுக்கு குலுக்கல் சீட்டு முறையின்படி வெற்றியாளர்களில் 3 சிறப்பு காதல் ஜோடிகளுக்கும் , 15 காதல் ஜோடிகளுக்கும் டில்கோ ஹோட்டல் வழங்கும் சிறப்பு தள்ளுபடிகளும், பெறுமதிமிக்க பரிசில்களும் காத்திருக்கின்றன.

VIP Ticket ற்கு அதிர்ஷ்ட குலுக்கல் பரிசுகளும், இரவு உணவும் கூடுதலாக இணைக்கப்பட்டிருக்கின்றது.

டிக்கட் விலைகள் சாதாரணம் – ரூபா 3000 மற்றும் வி.ஐ.பி. ரூபா 6000.

இந்த கலை நிகழ்வுகளின் டிக்கெட்களை பெற்றுக்கொள்ளவும் மேலதிக தகவல்களுக்கும் அழையுங்கள் –
0771100687 || 0770402829
0771222522 || 0763532372.

தகவல் – நிகழ்வு ஏற்பாட்டுக்குழு