குவியம் மீடியா பெருமையுடன் நடாத்தும் “மொபைல் குறும்படப்போட்டி 2023” – விபரம் உள்ளே 👉

937

தலைப்பு – உயிரைக் கொல்லும் போதைப்பொருள்

இலங்கையின் எப்பாகத்திலிருந்தும் படைப்பாளிகள் பங்குபற்றலாம்.

நிபந்தனைகள்
👉படைப்புக்கள் தமிழில் இருக்க வேண்டும் (ஆங்கிலத்தில் உப தலைப்பு இருப்பது விரும்பத்தக்கது)
👉போட்டியாளர்களுக்கு வயது வரம்பு இல்லை.
👉15 நிமிடங்களுக்கு மேற்படலாகாது.
👉போதைப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கும் வகையில் கருப்பொருள் இருக்க வேண்டும்.
👉குறிப்பிட்ட நபர் அல்லது மதத்தை சாடும் வகையில் கருத்துக்கள் இருந்தால் நிராகரிக்கப்படும்.
👉ஆவணப் படங்கள் (Documentary films) ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
👉யு-ரியூப் உள்ளிட்ட வேறெந்த சமூக ஊடகங்களிலும் பிரசுரிக்கப்படாததாக இருக்க வேண்டும்.
👉தாயகத்தில் இருந்து வரும் குறும்படங்கள் மட்டும் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படும்.
👉ஒளிப்பதிவு செய்ய பயன்படுத்திய தொலைபேசி வகை குறிப்பிடப்பட வேண்டும்.
👉படப்பிடிப்பு தளத்தில் எடுத்தப்பட்ட புகைப்படங்கள் (Making Stills) இணைக்கப்பட வேண்டும்.
👉படத்தொகுப்பு மற்றும் இசையமைப்பு என்பன தொழில் முறையானதாக (professional) இருக்க வேண்டும்.
👉குறும்படங்களை HD (1080) தரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
👉தெரிவு செய்யப்படும் முதல் 10 குறும்படங்கள் எமது யு-ரியூப் (Kuviyam Media) தளத்தில் வெளியிடப்படும்.
👉நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

உருவாக்கப்படும் குறும்படங்கள் எதிர்வரும் மார்ச் 01ஆம் திகதிக்கு முன்னர் kuviyam.lk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

முதல் பரிசு: ரூபாய் 50,000 மற்றும் வெற்றிக்கேடயம்
இரண்டாம் பரிசு: ரூபாய் 30,000 மற்றும் வெற்றிக்கேடயம்
மூன்றாம் பரிசு: ரூபாய் 20,000 மற்றும் வெற்றிக்கேடயம்

போட்டியிடும் குறும்படங்களில் இருந்து சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர் என 15 பிரிவுகளின் கீழ் வெற்றியாளர்களுக்குப் பதக்கங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.

முதல் மூன்று இடங்களையும் பெறும் திரைப்படங்கள் விருது விழா தினத்தன்று திரையிடப்படும். அதனுடன் இணைந்ததாக கலந்துரையாடலும் இடம்பெறும்.

படைப்பு பற்றிய விபரங்களோடு தங்கள் குறும்படங்களை இயக்குனர் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

மேலதிக தொடர்புகளுக்கு –

க.வரோதயன்
நிர்வாக இயக்குனர்
குவியம் மீடியா
தொலைபேசி 0771777434