மட்டக்களப்பு மண்ணில் உருவான “போடியார்” திரைப்பட இசை வெளியீடு இன்று

104

Visual art movies தயாரிப்பில் நம் நாட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கோடீஸ்வரன் இயக்கத்தில் முற்றுமுழுதாக மட்டக்களப்பு மண்ணில் உருவான முழு நீளத்திரைப்படம் “போடியார்“.

இதன் இசை வெளியீடு நிகழ்வு இன்று சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

சிறந்த இசையமைப்பாளருக்கான 2022 ஆம் ஆண்டுக்கான குவியம் விருதுகளை வென்ற ஏ.ஜே.சங்கர்ஜன் போடியார் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரின் இசையில் உருவான முத்தான மூன்று பாடல்கள் அன்று வெளியிடப்படவுள்ளன.

இன்று இடம்பெறவுள்ள போடியார் இசை வெளியீட்டு விழாவினை சரியாக 5:30 இற்கு ஆரம்பித்து 7:30 இற்கு முன்னர் முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. (மின்வெட்டு காரணமாக) எனவே அனைவரும் 5:30 இற்கு முன்னர் மண்டபத்திற்கு வந்து ஒத்துழைப்பைத் தருமாரு கேட்டுக்கொள்கின்றோம் என படக்குழு வேண்டியுள்ளது.

இசை வெளியீட்டு நிகழ்வை www.kuviyam.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம்.
சம நேரத்தில் அனலை எக்ஸ்பிரஸ் பேஸ்புக் பக்கத்திலும் பார்வையிடலாம்.

கனடாவில் MON TAMIL அலைவரிசை ஊடாகவும், ஐரோப்பா மற்றும் அவுஸ்ரேலியாவில் ஐ.பி.சி. இசை ஊடாகவும் நிகழ்வை நேரலையாக கண்டு மகிழலாம்.

எம் கலைஞர்களை கொண்டாடுவோம் வாரீர்.