மக்களிடம் எங்கள் சினிமாவை கொண்டு சேர்ப்பது சவாலானது – இயக்குனர் சனாதனன்

249

கொழும்பில் இருந்து தயாராகி வரும் ஒரு திரைப்படம் “மௌனமொழி”. இதனை பல குறும்படங்களை இயக்கிய சனாதனன் இயக்குகின்றார். ரவீந்திரன் தயாரிப்பில் வினோத்ரோன் இதற்கான ஒளிப்பதிவினை மேற்கொண்டுள்ளார்.

தீப்திகா, ஜனா ரவி, கவிநாத், கலை ரியா, பிரிய தர்ஷினி, கேதீஸ், பிரகேஷ், இஷாலினி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்புக்கள் யாவும் நிறைவடைந்த நிலையில் தற்சமயம் பின்கள வேலைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், படப்பிடிப்பு அனுபவங்கள் மற்றும் வெளியீடு குறித்து குவியம் இணையத்திற்கு இயக்குனர் வழங்கிய காணொளி வடிவிலான செவ்வி இணைக்கப்பட்டுள்ளது.