மட்டு. மண் வாசத்துடன் “மீன் பாடும் ஊரு…” பாடல்

236

Visual Art Movies சார்பாக வைத்தியர் அருளானந்தம், சதா சண்முகநாதன் மற்றும் முரளிதரன் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “போடியார்”.

இதனை முன்னணி இயக்குனர் கோடீஸ்வரன் இயக்கியுள்ளார். போடியார் திரைப்படத்தின் இசை வெளியீடு அண்மையில் மட்டக்களப்பில் மிகவும் பிரமாண்டமான முறையில் இடம்பெற்றது.

இந்நிலையில் அப்படத்தில் இருந்து முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. “மீன் பாடும் ஊரு…” என்ற இந்தப்பாடலை சஜய் ARS மற்றும் வைத்தியர் அருளானந்தம் ஆகியோர் எழுதியுள்ளதுடன் சுகிர்தராஜா சபேசன் மற்றும் சதா சண்முகநாதன் ஆகியோர் பாடியுள்ளனர்.

மட்டக்களப்பு மண் வாசத்துடன் படுவான்கரை என்கிற ஊரின் சிறப்புக்களையும் கூறும் விதத்தில் பாடல் அமைக்கப்பட்டுள்ளது. திரையில் பெரு விருந்தே காத்திருக்கிறது என்பதை பாடலைப்பார்க்கும் போதே புரிகின்றது. வாழ்த்துக்கள் படக்குழுவிற்கு…

Singers: Sugirtharaja Sapesan & Satha Shanmuganathan
Lyrics By: Sajay ARS & Dr. Arulanandem
Music, Mixed and Mastered by: @AJShangarjan
Directed By: K.Kodeeswaran
Produced By: Dr. Arulanendem, Satha Shanmuganathan & P.Muralitharan
Production: Visual Art Movies.