கர்ணன் படைப்பகம் யு-ரியூப் பக்கத்தில் வெளியாகிறது ”எனக்குள்ளே” திரைப்படம்!

360

மட்டக்களப்பில் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரு வரவேற்பை பெற்ற ”எனக்குள்ளே” திரைப்படம் இன்று (03) மாலை 05 மணிக்கு கர்ணன் படைப்பகம் (Karnan Creation) யு-ரியூப் பக்கத்தில் வெளியிடப்படுகின்றது.

Sips Cinemas சார்பாக வைத்தியர் சுகுணனால் தயாரிக்கப்பட்டு கோடிஸ்வரனினால் இயக்கப்பட்ட இத்திரைப்படத்திற்கு கேஷாந்த் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்புப் பணிகளை கணேசலிங்கம் புஷ்பகாந்த் செய்துள்ளார்.

சிஜே டுஜா, கௌசி ராஜ், தக்சன் கிரிஷ், ஜானு முரளிதரன், ஏகே.சந்துரு, வைத்தியர் சுகுணன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக சில திரையரங்க காட்சிகள் ரத்துசெய்யப்பட்டதனால் இத்திரைப்படத்தைப் பார்த்து இரசிக்கும் வாய்ப்பை பலர் இழந்திருந்தனர். அனைவரும் கண்டுகளிக்கக் கூடியவகையில் இன்று இத்திரைப்படம் வெளியாகின்றமை குறிப்பிடத்தக்கது.

பின்வரும் இணைப்பில் மாலை 05 மணிக்கு எனக்குள்ளே திரைப்படத்தை பார்வையிடலாம்….

திரைப்பட ட்ரெயிலர்