ஈழத்தின் வெந்து தணிந்தது காடு – படம் எப்படி? – புதிய திரையிடல் திகதிகளும் அறிவிப்பு

457

மதிசுதாவின் இயக்கத்தில் உருவான ஈழத்தின் “வெந்து தணிந்தது காடு“ திரைப்படம் கடந்த 29 ஆம் திகதி சிறப்புக்காட்சியாக யாழ். ராஜா திரையரங்கில் திரையிடப்பட்டிருந்தது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தப்படம் விமர்சன ரீதியிலும் பெரு வரவேற்பைப் பெற்றதை அடுத்து ஏனைய திரையிடல்கள் குறித்த கேள்விகள் அதிகரித்திருந்தன. இந்நிலையில், புதிய திரையிடல்கள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

யாழ் ராஜாவில்
(சிறப்புக்காட்சி) 10/02/2023 || 5 PM
(சாதரண காட்சி) 11 & 12 /02/2023 || 2 PM & 3:30 PM

பருத்தித்துறை SS இல்
(சிறப்புக்காட்சி) 10/02/2023 || 6 PM
(சாதரண காட்சி) 12/02/2023 || 2 PM & 3:30 PM

ஏனைய மாவட்ட திரையிடல்கள் பற்றி அறிந்து கொள்ள கீழ்வரும் இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
77-(582)-4512
77-(348)-1379

படம் முதல் திரையிடலின் பின்னர் பல வலையொளி பதிவாளர்கள் பார்வையாளர்களின் கருத்துக்களைப் பதிந்திருந்தார்கள். அந்த வகையில் அஃகேனம் வலையொளியினர் பதிந்த காணொளியை இங்கு பகிர்கின்றோம்.