Agenda 14 தயாரிப்பு ஒழுங்கமைப்பில் மாதவன் மகேஸ்வரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் குறும்படம் A MARRIAGE PROPOSAL.
இதை ஒரு மிக முக்கியமான குறும்படமாக நான் பார்க்கின்றேன். குறும்படத்தயாரிப்புக்களில் ஈடுபடுபவர்களும் இதைப்பார்த்தால் நன்று. ஏனெனில், குறும்படங்களுக்கு உரிய லட்சணங்கள் இதில் பல இருக்கின்றன.
பிரியாணி ஒவ்வொரு கடையில் ஒவ்வொரு சுவை. ஆனால் சில கடைகளில் மட்டும் தான் அதை திரும்பத்திரும்ப சாப்பிடத்தூண்டும் சுவை. அப்படி திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டும் குறும்படம் இது.
உள போராட்டம் எல்லோருக்குமே இருக்கும். சரி பிழை அறிந்தும் அந்தப் போராட்டம் நீடிக்கும்.
உறவு நீடிக்குமா, சமூகம் என்ன சொல்லும், அதுவும் ஒரு பெண் என்றால் எதிர்நீச்சல் போடமுடியுமா? இப்படி குடையும் கேள்விகள். அறுதியாக விடை எழுத மனம் ஒரு போதும் சம்மாதிக்காது.
நிச்சயிக்கப்பட்ட திருமணம் அது நிகழும் முன் இடம்பெறும் செயற்பாடுகளை இரு பெண்களை வைத்து சிறப்பாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். உண்மையில் இந்த கதைக்கும் அதனை வெளிப்படுத்தவும் அவர் காலம் எடுத்து இருப்பார். அதன் உழைப்பு படத்தில் தெரிகிறது.
சலிப்பில்லா அசைவுகள், நறுக்கான உணர்வான ஏற்ற இறக்க உரையாடல்கள், ஒரு களத்தில் வைத்து அதுவும் இரு பெண்கள் வாழும் ஒரு அறையில் கன கச்சிதாமாக நகர்த்தியிருக்கிறார். உரையாடலில் ஒவ்வொரு கருத்தும் ஆழமானவை.
பாரம்பரியம், நவீனம் என் போராடுவோருக்கு ஆற்றுப்படுத்தும் ஒரு படைப்பு.
நடிகர்கள் இருவரது தெரிவும் சிறப்பானது. அவர்கள் பொறுப்போடு நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறார்கள். அத்தனை உணர்ச்சிகள் ததும்ப கோபம், சுட்டிகாட்டல், அன்பு, அரவணைப்பு என சிறந்த நண்பியாக வாழ்ந்திருக்கிறார்கள். பாராட்டுக்கள் ரஷிகா மற்றும் ஜூலியானா.
ஆம் இப்படி நண்பி கிடைத்தும் பிறப்பு உறவின் பிற்போக்கு சிந்தனையின் அன்பிற்கு கட்டுப்பட்டு தமது திறமை, வளர்ச்சி, எதிர்காலம் என்பவற்றை கருகவைக்கும் நாயகி.
நல்ல படைப்பு. பலதை சொல்லிட்டு போகலாம். பார்ப்போரை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் ஒரு படைப்பு.
குறும்பட தயாரிப்பாளர்கள் ஏன் பார்க்க வேண்டும் என்றால்… கதை, களம், நடிகர்கள் என பெரிதாக நினைத்து படம் எடுக்காமலே விடும் மனப்போராட்டப்காரருக்கு இந்த படைப்பு உத்வேகத்தை அளிக்கும்.
பாருங்கள். திருமண பேச்சு மட்டுமல்லாமல் உங்கள் பலபிரச்சினைக்கு மருந்து.
வாழ்த்துக்கள் படக்குழு.

Written and Directed by : Mathavan Maheswaran
Creative Producer: Anomaa Rajakaruna
DOP: Mahinda Abeysinghe
Editor: Mathavan Maheswaran
Music: Jeevanandhan Ram
Dubbing: Thavarany Maheswaran
Assistant Director: Thanuchanthan Hari
Subtitles: Varuon Thushyanthan
Colourist: Dinindu Jagoda
Post Production Support : IMADR Asia Committee
Makeup – Meylisha Antony Stanley